நாடாளுமன்றத் தேர்தல் பராக் !! பாஜகவின் கடைசி பட்ஜெட்… வருமான வரி விலக்கு உச்சவரம்பு என்ன தெரியுமா ? மகிழ்ச்சி செய்தி !!

By Selvanayagam PFirst Published Jan 15, 2019, 7:17 AM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த அறிவிப்புக்காக அவர்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் பதவி ஏற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வரும்  மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட், வரும், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.


இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவினரை கவரும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம் பெறும், என, எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான, ஆண்டு வருமானத்துக்கு, வரி கிடையாது.

முதல் மூன்று பட்ஜெட்களில், சில வரி சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கடந்த பட்ஜெட்டில், எந்த வரிச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக, 40 ஆயிரம் ரூபாயை, நிரந்தரக் கழிவாக அறிவிக்கப்பட்டது.

5 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்கு என்பது நடுததர மக்களுக்கு மிக பயனுள்ளதா இருக்கும் என்பதால் அவர்களும் இதனை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

click me!