அமித்ஷா விஷயத்தில் சொதப்பல் … பாசத் தங்கைக்கு புதிய பொறுப்பு கொடுத்த ஸ்டாலின் !!

Published : Aug 31, 2018, 06:26 AM ISTUpdated : Sep 09, 2018, 07:36 PM IST
அமித்ஷா விஷயத்தில் சொதப்பல் … பாசத் தங்கைக்கு புதிய பொறுப்பு கொடுத்த ஸ்டாலின் !!

சுருக்கம்

மறைந்த கருணாநிதிக்காக சென்னையில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷாவை அழைத்த விஷயத்தில் திமுகவின்ர் டெல்லியில்  செய்த லாபி எடுபடவில்லை என்றும், இதையடுத்து  இனி டெல்லி விஷயங்களை தனது பாசத் தங்கை கனிமொழியே பார்துக் கொள்ளட்டும் என கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 7 ஆம் தேதி திமுக தலைவராக இருந்த  கருணாநிதி உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சார்பில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

இறுதியாக சென்னை YMCA  மைதானத்தில் இன்று தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க அதிமுகவைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்துக்கட்சி கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் இந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்குப் பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

இந்த விவகாரத்தில் திமுகவின் டெல்லி சோர்ஸ் அமித் ஷாவை அழைத்து வருவது குறித்து பேசியிருக்கிறது, ஆனால்  சென்னை வருவது குறித்து அமித்ஷா எந்தவிதமான உறுதிமொழியும் கொடுக்கவில்லையாம்.

ஆனால் அமித்ஷா வருவதாக டெல்லி சோர்ஸ்கள்  சென்னைக்கு தகவல் தர, அதை நம்பி திமுக சார்பில் இன்விடேஷன் அடிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் அமித்ஷா வருவதாக உறுதி கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக நிதின் கட்கரியை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த குழப்பத்துக்கு டெல்லியில் இருந்து மூவ் பண்ணிய சோர்ஸ்கள்தான் காரணம் எனத் தெரிந்ததும்  ஸ்டாலின் செம கடுப்பாகிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இனிமேல் டெல்லி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழியையே பார்த்துக் கொள்ளச் சொல்லி ஸ்டாலின் கூறியதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!