2026-இல் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக ஆட்சி... அசைக்க முடியாத நம்பிக்கையில் அன்புமணி ராமதாஸ்!

Published : Apr 25, 2022, 09:27 AM IST
2026-இல் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக ஆட்சி... அசைக்க முடியாத நம்பிக்கையில் அன்புமணி ராமதாஸ்!

சுருக்கம்

“தமிழகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றன." 

பாமகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, தேர்தல் நேரத்தில் இதை வாக்குகளாக நாம் மாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

முறிந்த அதிமுக - பாமக கூட்டணி

தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் சந்தித்த பாமக, 2021-இல் நடைபெற்ற 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. பின்னர் பாமக பொதுக்குழு கூட்டத்தில், ‘அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ என்றும் ‘மீண்டும் பாமக தனித்து போட்டியிடும்’ என்றும் அக்கட்சி அறிவித்தது. 2026-இல் அன்புமணி தலைமையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து பேசி வருகிறார். பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் டாக்டர் ராமதாஸும், டாக்டர் அன்புமணி ராமதாஸும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள்.

நம்பிக்கையில் அன்புமணி

இந்நிலையில் திருவண்ணாமலை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் வந்தவாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பாமக இளைஞர் அணி தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, “தமிழகத்தில் கடந்த 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பார்கள்.  பாமகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, தேர்தல் நேரத்தில் இதை வாக்குகளாக நாம் மாற்ற வேண்டும். வருகிற 2026-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை அமைக்கும்.” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தீர்மானங்கள்

இந்த்கக் கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும், ஆரணியில் பட்டு பூங்காவை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!