அணு ஆயுதப் போருக்கு பாகிஸ்தான் ரெடி !! வம்புக்கிழுக்கும் இம்ரான்கானின் திமிர் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 10:54 PM IST
Highlights

காஷ்மீர் விவகாரத்தில்  அணு ஆயுதப் போருக்கு பாகிஸ்தான் ரெடியாக இருப்பதாக இம்ரான் கான்  இந்தியாவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார்.

மத்திய அரசு  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. 

இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும், அதுவும் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து மட்டும்தான் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது. 

இதற்கிடையே அணுஆயுதப் போர் வெடிக்கும் என்ற தொனியில் தொடர்ந்து இம்ரான் கான் பேசிவருகிறார். மீண்டும் அதுபோன்று எச்சரிக்கையை விடுக்கும் வகையில் பாகிஸ்தான் மக்களிடம் உரையாற்றியுள்ளார்  தற்போது இம்ரான் கான் உரையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது,  காஷ்மீர் விவகாரம் போரை நோக்கி நகர்ந்தால், இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன.  அணுஆயுதப் போரில் யாரும் வெற்றிபெறமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

அதற்கு உலகளாவிய மாற்றங்கள் இருக்கும். உலகின் வல்லரசுகளுக்கு இவ்விவகாரத்தில் ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது... அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்களா? அல்லது இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், பாகிஸ்தான் தான் முடிந்த அனைத்தையும் செய்யும்  என திமிராக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.

click me!