கர்நாடகாவில் 3 துணை முதலமைச்சர்கள் நியமனம்…. எடியூரப்பாவின் அடுத்த அதிரடி !!

By Selvanayagam PFirst Published Aug 26, 2019, 10:17 PM IST
Highlights

கர்நாடக அமைச்சரவையில் பெண் ஒருவர் உள்பட மொத்தம் 17 பேர் உள்ள நிலையில் அவர்களில் துணை முதலமைச்சர்களாக கோவிந்த் கர்ஜோல், டாக்டர் அஷ்வத் நாராயண், லக்ஷ்மி சாவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

கர்நாடகா  மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சரவையில் ஏற்கனவே 17 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் தற்போது துணை முதலமைச்சர்களாக கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மன் சங்கப்பா சவடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித்துறை, சமூக நலம் ஆகியவை கர்ஜோலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. டாக்டர் அஷ்வத்துக்கு உயர் கல்வி, தகவல் தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, அறிவியல் டெக்னாலஜி ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.)மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கர்நாடகாதான் முன்னணி மாநிலமாக உள்ளது.

அங்கு அந்த 2 துறைகளையும் வைத்திருக்கும் அமைச்சர் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். தற்போது இந்த துறைகள் டாக்டர் அஷ்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சாவதிக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

பசவராஜ் பொம்மைக்கு உள்துறை, முன்னாள் முதலமைச்சர்  ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொழில்துறை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்கு ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலா, கன்னட மொழி மற்றும் கலாசார துறை சி.டி. ரவிக்கும், பெண்கள், குழந்தைகள் நலவாழ்வுத்துறை சசிகலா அன்னாசாகிபுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற துறைகள் அனைத்தும் முதல்வர் எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

click me!