தவறு செஞ்சுட்டீங்க மோடி.. இம்ரான் கான் திடீர் பாய்ச்சல்

By Asianet Tamil  |  First Published Feb 6, 2020, 5:15 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமா் நரேந்திர மோடி தவறு செய்துவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்தார்.


பாகிஸ்தானில் முசாபராபாதில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப் பேரவையில் இம்ரான் கான் நேற்று பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370பிரிவு சிறப்பு அந்தஸ்தை பிரதமா் மோடி  அரசு ரத்து செய்தது.

பாகிஸ்தானுடன் பகைமையை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களவைத் தேர்தலில் வென்று இதைச் செய்துள்ளார். மிகப்பெரிய தவறை பிரதமர் மோடி செய்து விட்டாா். 

Latest Videos

இந்து தேசியம் என்னும் பூதம், குடுவையில் இருந்து வெளியே வந்து விட்டது. அதை மீண்டும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. இதில் இருந்து அவா் பின்வாங்க முடியாது.

காஷ்மீருக்கு விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யதபின்புதான் காஷ்மீா் பிரச்னை உலக நாடுகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது,

 உலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை. காஷ்மீா் பிரச்னையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பும் இந்தியாவின் முயற்சிக்கு நாம் வாய்ப்பளித்துவிடக் கூடாது.

நாம் அரசியல் ரீதியாகவும் போராட வேண்டும் என்பதால் இந்தியாவின் சூழ்ச்சி வலைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்தார்

click me!