தவறான வடிகால் கட்டமைப்பே சென்னை வெள்ளத்திற்கு காரணம்.. குமுறும் நீரியல் வல்லுனர் ஜனகராஜ்.

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2021, 2:22 PM IST
Highlights

அதேபோல அடையாறு ஆறு, மணிமங்கலம் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள 130க்கும் அதிகமாக ஏரிகளில் வடிகிறது தண்ணீரை கொண்டு வந்து அது செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து பின்னர்  அந்த தண்ணீரை பட்டிணம்பாக்கம் முகத்துவாரம் வழியாக கடலில் கொண்டு சேர்க்கிறது.

சென்னையில்  வெள்ள நீர் வடிவதற்கான கட்டமைப்பு போல தெற்காசியாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லை ஆனால் அது அனைத்தையும் நாம் வீண்டித்து விட்டோம் என நீரியல் வல்லுநரும் பேராசிரியருமான ஜனகராஜ் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் வடியாமல் வெள்ளம் தேங்கி நிற்பதற்கு தவறான வெள்ள நீர் வடிகால் கட்டமைப்புகளே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய், மக்கள் வரி பணம் வீண்டிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ள அவர் இது தொடர்பாக முதலமைச்சர் விசாரடை கமிஷன் அமைத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. போதுமான அளவுக்கு வெள்ளம் வெளியேறாததால்  மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நீரியல் வல்லுநரும் பேராசிரியருமான ஜனகராஜ், சென்னைக்கு வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு, மழை நீரை வெளியேற்றுவதற்கு இயற்கையாக உள்ள கட்டமைப்பு போல தெற்காசியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் எனக்கு தெரிந்து இல்லை. ஆனால் அது அனைத்தையும் நாம் பாழ்படுத்திவிட்டோம். 

காலம் காலமாக மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது, அப்போதெல்லாம் இது பிரச்சனையாக இல்லை, ஆனால் கடந்த 20, 30  ஆண்டுகளாக இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக 2015 பிறகு மழை வெள்ளம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே தெற்காசியாவிலேயே சென்னைக்கு இருக்கிற வெள்ளநீர் கட்டமைப்பு வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லை, ஏரிகள், ஆறுகள், மழைநீர் வெளியேறுவதற்கான வடிகால்கள் இருக்கிறது. வடக்கே கொசஸ்தலை ஆறு ஆரணி ஆறு உள்ளது எவ்வளவு வெள்ளம் வந்தாலும்  அந்த வெள்ளத்தை அது கடலில் கொண்டு சேர்க்கிறது. ஆரணியாறு புளிகேட் ஏரிவழியாக போய் கடலில் கலக்கிறது. சென்னையின் நடுப்பகுதியில் கூவம் ஆறு, காவேரிபாக்கத்திலிருந்து வருகிற நீரை கேசவரம் அணைக்கட்டு கொண்டுவந்து அதனுடன் ஒரு 80க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீரை கொண்டுவந்து கூவம் ஆறு சென்னை பல்கலைக்கழகம் எதிரே மெரினாவில் கலக்கிறது.

அதேபோல அடையாறு ஆறு, மணிமங்கலம் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள 130க்கும் அதிகமாக ஏரிகளில் வடிகிறது தண்ணீரை கொண்டு வந்து அது செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து பின்னர்  அந்த தண்ணீரை பட்டிணம்பாக்கம் முகத்துவாரம் வழியாக கடலில் கொண்டு சேர்க்கிறது. அப்படியெனில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்து விடவேண்டும், ஆனால் வடியவில்லை, அதேபோல தண்ணீர் தேக்கி வைப்பதற்கு சென்னையில் 60க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தது, ஓட்டேரி நல்லா, ஓட்டேரி ஏரி, மாம்பலம் ஏரி, விருகம்பாக்கம் ஏரி, வியாசர்பாடி ஏரி, வில்லிவாக்கம் ஏரி இந்த ஏரியில் பரப்பளவு 270 ஏக்கர் கொண்டது,ஆனால் இப்போது அது சுருங்கி விட்டது. வேளச்சேரி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, ஆவடி ஏரி, அம்பத்தூர் ஏரி இது அனைத்தையும் நாம் இப்போது வீடுகள் கட்சி சாலைகள் அமைத்து அழித்து விட்டோம்.  இப்போது எல்ல ஏரிகளிலும் சாக்கடையும், பிளாஸ்டிக் கழிவுகளும்தான் தேங்குகிறது. சென்னையில் மூன்று பெரிய ஆறுகள்,   60க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் இதுவெல்லாம் பராமரிக்க முடியாமல் போனதால் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம்.

அதேபோல சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் வடிகால் கட்டமைப்பு என்பது அறிவியலுக்குப் புறம்பானதாக உள்ளது, விஞ்ஞானபூர்வமாக கட்டப்படாத அந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளால்தான் தற்போது சென்னையில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. வெள்ள நீர் வடிகால்என்றால் அதில் தானாக வெள்ளம் வடிய வேண்டும், ஆனால் எல்லா இடங்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது, ஏன் தேங்குகிறது, அப்படியென்றால் அந்த கட்டமைப்புகள் தவறாக உள்ளது என்றுதானே அர்த்தம். அனைத்தும் அன் சயின்டிஃபிக் ஆக கட்டப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்குள்ளாக வெள்ளம் வடிய வேண்டும், ஆனால் ஒரு நாள் கழித்து கூட வெல்ல வடிவதில்லை என்றால் அந்த கட்டமைப்புகள் அனைத்தும் தவறாக கட்டப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. வெள்ள நீர் வடிகால்கள் கட்டமைப்புக்கென தனி டிசைன் இருக்கிறது அதற்கு தனி முறைகள் இருக்கிறது. அது எதையுமே பின்பற்றாமல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள்  வீணாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க குற்றச்செயல்,

இதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அனைத்தையும் தவறாக செய்துவிட்டு இப்போது வெள்ளம் வந்துவிட்டது என கூறுவதில் நியாயம் இல்லை, சென்னை தியாகராயநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது, இப்போது நிலைமையே பாருங்கள், அது சுமார் சிட்டியா.? முதல்வர் இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

click me!