
பெட்ரோல் VS ஜிஎஸ்டி..! இன்று மாலை முக்கிய முடிவு எடுக்கும் மோடி..!
ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது கூட்டம் டெல்லியில் அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்,டீசல் வந்தால் பெட்ரோல், டீசல் மீதான விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இது குறித்த முக்கிய ஆலோசனைகள் இன்று மாலை நடைபெற உள்ளன.மேலும்,வணிகர்களுக்கு தேவையான அனைத்து வசதியையும்,அவர்களது கோரிக்கையையும்,வரியை எளிதில் செலுத்துவதற்கான சிறப்பு முறையையும் துரித படுத்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தது.ஆனால் கடந்த ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இதுவரை பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு சுமார் பத்து ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.
எனவே இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் தரப்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தால் மக்கள் சுமை இன்னும் குறையும் என மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தியது.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதன் காரணமாகவும், மக்களின் மிக பெரிய கோரிக்கையான பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது