
சொத்து குவிப்பு வழக்கில் தற்போது சசிகலா உள்ளிட்ட 3 பேரையும் குற்றவாளி என அறிவித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து ,அதாவது சசிகலா, இளவரசி, சுதாகரனை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல காவல்துறை ஆயத்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடவடிக்கை என்ன ?
உச்சநீதிமன்ற தீர்பின்ப்படி பெங்களூரு கோர்ட்டில் சசிகலா சரணடைய வேண்டும்.இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் பெங்களூரு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கூவத்தூர் விடுதியில் இருக்கும் சசிகலாவை அழைத்து செல்ல தேவையான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஐ.ஜி வரதராஜன்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, சசிகலாவை பெங்களூர் அழைத்து செல்வதற்காக, அழைத்து கூவத்தூர் விடுதிக்குள் ஐ.ஜி வரதராஜன் தற்போது உள்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க புறப்பட்டதையொட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்