ஆட்சியமைப்பாரா எடப்பாடி? - ஆளுநருடன் சந்திப்பு

 
Published : Feb 14, 2017, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஆட்சியமைப்பாரா எடப்பாடி? - ஆளுநருடன் சந்திப்பு

சுருக்கம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில்  எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பாலச்சாமி உள்ளிட்ட 12 பேருக்கு மாலை 5.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்.  

ஆளுநர் நேரம் ஒதுக்கியதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். பின்னர், கிண்டி ராஜபவனில் ஆளுநர் வித்யாசர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

மேலும் அதிமுக அதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் 12 மூத்த நிர்வாகிகளும் ஆளுனரை சந்தித்தனர். 

இந்த 5 நிமிட சந்திப்பு முடிவடைந்த பின் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூவத்தூர் புறப்பட்டு சென்றார். 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு