"ஜெ.வுக்கு இருந்த மரியாதை சசிகலாவுக்கு இல்லை" -முரளிதர ராவ் தாக்கு

First Published Feb 14, 2017, 5:28 PM IST
Highlights


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் வேட்பாளராக தனக்கு பதிலாக தன்னுடைய விசுவாசி எடப்பாடி பழனிசாமியைச் தேர்வு செய்தாலும், மக்கள் நம்பிக்கையை வெல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உறவினர்கள் சசிகலா,சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.  

அதிமுக சார்பில் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருந்த சசிகலா இப்போது சிறை செல்ல உள்ளதால், முதல்வர் கனவு கலைந்துள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து தமிழகத்தின் பாரதிய ஜனதா பொறுப்பாளரும், கட்சியின் பொதுச்செயலாளருமான முரளிதர் ராவ் டெல்லியில் கூறுகையில், “ அதிமுக பொதுச்செயலார் சசிகலா சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் கனவில் இருந்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறை செல்கிறார்.

கட்சியில் வேண்டுமானால் அவருக்கு உயர்ந்த பதவி இருக்கலாம், ஆனால், ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பும், மரியாதையும் அவருக்கு இல்லை. மக்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, கவனிக்கத்தக்க விசயமாகும். சசிகலா தனக்கு பதிகால தன்னுடைய ஆட்களை முதல்வராகத் தேர்வு செய்தாலும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது. மக்களின் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கணக்கில் எடுத்துக்கொள்வார். இது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் எடுத்துக்கொள்ளாமல், நம்பகத்தன்மையையும் சேர்த்து கணக்கில் கொண்டு, ஆட்சி அமைக்க அழைக்க விடுப்பார். யார் நிலையான ஆட்சி தருவார்கள், அதற்கு தகுதியான நபர்கள் என்பதை அறிந்து அவர்களை ஆளுநர் அழைப்பார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக சட்டமன்றத் தலைவர் மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் நம்பிக்கையை பெற முடியாது. புதிய சட்டமன்றத் தலைவர் பொம்மை போலவும், தலையாட்டும் பொம்மை போலவும் செயல்படுவார்.

இந்த தீர்ப்பு என்பது அனைத்து விதமான நகர்வுக்கும் கிடைத்த அடி என்று அதிமுக கட்சி தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு தேவை இப்போது ஊழல் இல்லாத ஆட்சியும், திறமையான நிர்வாகம் மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.

 

click me!