பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயார்..... கெத்து  காண்பிக்கும் ஓபிஎஸ் ....!!!

 
Published : Feb 14, 2017, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயார்..... கெத்து  காண்பிக்கும் ஓபிஎஸ் ....!!!

சுருக்கம்

ஒ பி எஸ் :

தற்போது நிலவும்  அசாதாரண  அரசியல் சூழலில்,  யார் அடுத்த முதல்வர் என்ற  எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அதிமுக சட்ட மன்ற  கட்சி தலைவராக எடப்பாடி  பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தமிழக  ஆளுநரை சந்திக்க  நேரம்  கேட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.இதனை தொடர்ந்து தற்போது மாலை 5.3௦ மணிக்கு மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் .

வித்யா சாகர் ராவ் :

இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் கருத்தை  தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சட்டப்பேரவையில்  பெரும்பான்மையை  நிரூபிக்க  தயாராக இருப்பதாக ஒபிஎஸ்  தெரிவித்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

அடுத்து என்ன நடக்க போகிறது ?

கடந்த ஒரு வார காலமாக, தமிழக  அரசியலில் யார் யார்  எந்த  பதவியில் உள்ளனர்,  யார் யாரை பதவியிலிருந்து  நீக்கினார்கள் , யாரை  நீக்கினார்கள் ,  யார் பதவியில் உள்ளார்கள்  என கூட தெரியாமல்  மக்கள் பல  குழப்பத்தில்  உள்ளனர். இந்நிலையில்,  சட்டப்பேரவையில்  ஒ பி எஸ்  பெரும்பான்மை  நிரூபிக்க  வேண்டிய  கட்டாயம்  ஏற்படுமா ? அல்லது  குடியரசு  ஆட்சி  அமல்படுத்தப்படுமா ? என்ற  பல  கேள்விகள்  எழுந்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு