
சசிகலா விரும்பினால் அவரை பரோலில் எடுக்கத் தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் தஞ்சாவூரில் இன்று காலாமானார். இதனைத் தொடர்ந்து அதிமுக துணை செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூர் விரைந்துள்ளார். இதற்கிடையே இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் டிடிவி.தினகரன் கூறுகையில், மகாதேவன் மறைவு குறித்து சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பரோலில் வர விரும்பினால் அற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையில், பெங்களுர் பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு, மகாதேவன் மறைவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும், அதிர்ச்சியடைந்த சசிகலா சிலைபோல் நின்றுவிட்டாராம்.
சிறிது நேரம் அவர் எதுவும் பேசமுடியாமல், திகைத்தாராம். அவரை இளவரசி மற்றும் அங்கிருந்த பெண் போலீசார் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.