
திமுகவில் இருப்பவர்களுக்கு தில் இருந்தால் பிஜேபி வேட்பாளர்களில் ஒருவரை தூக்கி காட்டடும், என்றும், அந்தளவிற்கு தைரியம் இல்லாததால்தான் என் கட்சியின் வேட்பாளர்களை கடத்துகிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு நிறைவுபெறும் நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய அறிவிப்புகளையும் , கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற 60க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என திமுக பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் என்பதை வார்த்தையாக இல்லாமல் சொல்லாகவும் செயலாகவும் இருக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. பணநாயகம் நாடு என்றுதான் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். கூட்டமாக கொள்ளையடித்தால் சரி, கொலை செய்தால் சரி என்றால் இதனை யார் கேட்டு வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
மாற்றத்திற்காக மக்கள் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் திராவிட கட்சிகளை தாண்டி பிற கட்சிகளை ஆதரிக்க தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தால் நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது எனவும், இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கு காரணம் திராவிட கட்சிகளே என குற்றம் சாட்டினார். நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றுவதற்காகவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஆட்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக போட்டியிடவில்லை என தெரிவித்தார். திராவிட கட்சிகள் உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்யாமலே பொருட்களை கொள்முதல் செய்து அதில் முதலீடு செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பொய் வழக்கில் கைது செய்யும் திமுகவினர்.
தில் இருப்பவர்கள் திமுகவில் இருக்கிறார்கள் என்றால் பிஜேபியின் வேட்பாளர்கள் ஒருவரை தூக்கி காட்டடும், தைரியம் இல்லாததால் தான் என் கட்சியின் வேட்பாளர்களை கடத்துகிறார்கள் என குற்றம்சாட்டினார் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை மிரட்டும் திமுகவினருக்கு இதே பதிலை நாம் தமிழர் கட்சி கட்டாயமாக திருப்பி கொடுக்கும் எனவும் கடந்த கால வரலாற்றை திமுக திரும்பி பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில், பிஜேபியை எதிர்த்து நிற்க பயந்து கூட்டணி கட்சிகளுக்கு திமுக இடத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது என குற்றம்சாட்டினார். திராவிடம் என்றால் என்ன? திராவிடர்கள் என்பவர்கள் யார் யார்??முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லட்டும், 10 லட்சம் கோடி கடன் எப்படி வந்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு காரணம் மோடி தான் எனவும், நியாயமாக பார்த்தால் துர்கா ஸ்டாலின் பிரதமர் மோடி படத்தை வைத்து தான் சாமி கும்பிட வேண்டும் எனவும் தெரிவித்தார். இரண்டு கட்சிகளும் ( திமுக, அதிமுக) மாறி மாறி என்ன சாதித்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர் 2024, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம், மக்கள் வாக்களிக்காவிடில் தனித்து நிற்குமர நாங்கள் ஏமாறப்போவதில்லை ,மக்கள் தான் மற்றவர்களுக்கு வாக்களித்து தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை தேர்தல் பிரச்சாரங்களில் பைத்தியக்காரத்தனமாக பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.