உ.பி.யில் யோகி ஆட்சி திரும்பவும் வந்தால் 2024ல் மோடிதான் மீண்டும் பிரதமர்.. எதிர்க்கட்சிகளை அலறவிடும் அமித்ஷா!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 8:10 AM IST
Highlights

சொந்த குடும்பங்களின் வளத்திற்காக இயங்கும் கட்சி அல்ல பாஜக. ஏழை, எ ளிய மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பாஜக நாட்டில் நிரூபித்துள்ளது.
 

உத்தரப்பிரதேச தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வருவது 2024-ஆம் ஆண்டில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க அடிக்கல்லாக அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளன. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளன. இதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றன. இதில் உ.பி. தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருப்பதால், இந்தத் தேர்தலில் பாஜக தனது முழுக் கவனத்தையும் குவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் பெறும் வெற்றி, அடுத்து 2024-இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அச்சாரமாக இருக்கும் என்பதால், பாஜக மூத்த தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித்ஷா இத்தேர்தலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

உ.பி.யில் முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் யோகியே மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், யோசி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்பதையும் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் லக்னோவில் பாஜகவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது, ‘என் குடும்பம்; பாஜக குடும்பம்’ என்ற  கோஷத்தை தேர்தலுக்காக் அறிமுகம் செய்தார். 

பிறகு இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார். அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்க வேண்டும். இதற்காகக் கட்சி தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடனும் தொய்வில்லாமலும் பணியாற்ற வேண்டும். உத்தரப்பிரதேச தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும். இங்கு முகலாயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் இப்போது பாஜக ஆட்சி அமைத்த காலம் வரை பாபா விஸ்வநாத், ராமர், கிருஷ்ணரின் புண்ணிய பூமியாக உத்தரப்பிரதேசம் காட்சி அளிக்க அளிக்கவில்லை.

இதெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த அங்கீகாரமெல்லாம் கிடைத்தது. இந்த அங்கீகாரம் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது பாஜகதான். அதுமட்டுமல்ல, பாஜக மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்தும் சென்றுள்ளது. சொந்த குடும்பங்களின் வளத்திற்காக இயங்கும் கட்சி அல்ல பாஜக. ஏழை, எ ளிய மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பாஜக நாட்டில் நிரூபித்துள்ளது.

முன்னாள் முதல்வர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார்? இதையெல்லாம் மக்கள் மத்தியில் பாஜக தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் தங்கள் சொந்த சாதியினருக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்தினர்கள். ஆனால், பாஜக ஆட்சிதான் ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேச மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறது. எனவே, 2022-ஆம் ஆண்டு உ.பி. தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும். இந்த வெற்றி, 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவும் அடிக்கல்லாக அமைய வேண்டும்.” என்று அமித்ஷா பேசினார். 

click me!