ராமதாசுக்கோ.. அன்புமணிக்கோ செருப்பு தூக்கி காண்பித்தால்.. சும்மா விடுவார்களா.. போட்டு சாத்தும் சவுக்கு சங்கர்

Published : Dec 27, 2021, 04:48 PM IST
ராமதாசுக்கோ.. அன்புமணிக்கோ செருப்பு தூக்கி காண்பித்தால்.. சும்மா விடுவார்களா.. போட்டு சாத்தும் சவுக்கு சங்கர்

சுருக்கம்

சீமான் செருப்பை தூக்கி காண்பித்த போது அதைக் கண்டித்து இருக்க வேண்டும் ஆனால் அதை விடுத்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தி விட்டார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டிக்கின்றனர் இதே பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி  ராமதாசுக்கும் செருப்பு தூக்கி காண்பிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா?

திமுகவினர் மேடையேறி தாக்கியதை மட்டும் கண்டிக்கும் பாமக தலைவர்கள் சீமான் மேடையில் செருப்பை தூக்கி காண்பித்ததை ஏன் கண்டிக்கவில்லை என்றும், ராமதாசையோ, அன்புமணியையோ செருப்பு தூக்கி காண்பித்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? என்றும் சவுக்கு சங்கர் கேள்வியெழுப்பியுள்ளார். தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி திமுகவினர் தாக்குதல் நடத்தியதை பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டித்துள்ள நிலையில் சவுக்கு சங்கர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இலங்கையில் நடந்த இறுதிப் போருக்குப் பின்னர் "தமிழீழம் எங்கள் தாகம்" என்ற முழக்கத்துடன் சி.பா ஆதித்தனார் நடத்திய நாம் தமிழர் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார் சீமான். அன்று முதல் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும், அந்த காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே திமுக வேடிக்கை பார்த்தது என்றும், திமுக தமிழினத் துரோகி என்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார் சீமான். இதனால் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அடுத்தடுத்த கைது செய்து சிறைப்படுத்தியது. இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், தமிழர்களை இனப்படுகொலை செய்த திமுக என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றோம் தொடர்ந்து பேசி வருகிறார் அவர். இதனால்  நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு 5 ஆண்டுகள் கழித்து மீண்டிம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் திமுகவை சீமான் குறிவைத்து தாக்கி பேசுவது அதிகரித்திருக்கிறது.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் முதல்வரையும், அவரின் குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே நேரத்தில் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய யூடியூப் மாரிதாஸ் என்பவரையும் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். ஆனால் நீதிமன்றம் மாரிதாசுக்கு பிணை வழங்கியுள்ளது. எனது மாரிதாஸ் சாட்டை துரைமுருகன் கழுதை ஒப்பிட்டு பேசிய சீமான், பாஜக ஆதரவாளரான மாரிதாஸ்க்கு எதிராக  திமுக சரியாக வழக்கு நடத்தவில்லை. சரியாக வாதாடவில்லை, அவர்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் சலுகை காட்டியுள்ளனர், எனக் குற்றம் சாட்டியதுடன், அப்படி என்றால் உண்மையிலேயே திமுகதான் சங்கி, திமுகதான் பாஜகவின் பி டீம்,  ஆனால் என்னைப் பார்த்து சங்கி என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இதுதான் பதில் என கூறியபடி தனது காலில் இருந்த செருப்பை கழற்றி காண்பித்தார். சீமானின் இந்த செயல் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

பலரும் அவரின் செயலை கண்டித்து வருகின்றனர். ஒரு அரசியல்வாதி தமிழ் தேசியம் பேசுகிற அரசியல்வாதி, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா என்றும் விமர்சனம் செய்து கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட, ஹிம்லர் என்பவர் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் ஏறி மரியாதையாக பேசுங்கள் என எச்சரித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கீழே இருந்த நாற்காலிகளை திமுகவினர் தூக்கி வீசி அதகளம் செய்தனர். அங்கிருந்த மைக் செட் பிடுங்கி எறியப்பட்டது. இதனால் பொது மக்கள் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஒரு அரசியல் கட்சி நடத்தும்  ஆர்ப்பாட்டம் மேடை ஏறி திமுகவினர் தாக்கி அராஜகம் செய்துள்ளனர் என அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி, சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஆனால் சீமான் மற்றும் அவரது கட்சியினரும் தொடர்ந்து முதல்வரையும் அவதூறு பேசி வருகின்றனர்.

எனவே மேடையேறி மரியாதையாக பேசுமாறுதான் நாங்கள் எச்சரித்தோம், நாங்கள் இப்படி நடந்து கொள்வதற்கு அவர்கள் தான் எங்களை தூண்டினர் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்  திமுகவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுக வினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. சகிப்புத்தன்மை ஜனநாயக அரசியலின் அடிப்படை, யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தர தொடங்கினான் தமிழக அரசியல் களமாக இருக்காதே, வன்முறைக் களமாக மாறி விடும், என அவர் எச்சரித்தார். ராமதாஸும் இதே பாணியில் திமுகவை விமர்சித்திருந்தார். நாளைக்கு சீமான் செருப்பு தூக்கி காட்டிய விவகாரம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பலர் வசதியாக திமுகவை மட்டும் விமர்சிக்கின்றனர். ஆனால் அந்த நிலைக்கு தூண்டிய சீமானை கண்டிக்க மறந்து விடுகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய முழு விவரம் பின்வருமாறு:- தர்மபுரியில் திமுகவினர் நடந்துகொண்டாது என்பது என்னைப் பொறுத்தவரையில் தவறு என்று தான் கூறுவேன். இதுதொடர்பாக புகார் வந்தால் காவல் துறை தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திமுகவினர் மேடையில் ஏறி மேடையை உடைத்தது அராஜகம் தான். ஆனால் இதுவரை நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் காவல்துறையிடம் புகார் கொடுக்கவில்லை, கேட்டால் புகார் கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று தெரியும், அதனால் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த விவகாரத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை நாம் கண்டிக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் போன்றோர் திமுகவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளனர். இதில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் இவர்கள் கண்டிப்பதில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் சீமான் மேடையில் செருப்பை தூக்கி பாண்பித்த்தையும் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை அதனால் தான் இந்த பிரச்சனை இந்த அளவிற்கு சென்றுள்ளதையும் கவனிக்க வேண்டும். 

சீமான் செருப்பை தூக்கி காண்பித்த போது அதைக் கண்டித்து இருக்க வேண்டும் ஆனால் அதை விடுத்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தி விட்டார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டிக்கின்றனர் இதே பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி  ராமதாசுக்கும் செருப்பு தூக்கி காண்பிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் சும்மா விடுவார்களா? சீமானே, தன் செருப்பை தூக்கி காண்பித்ததில் என்ன தவறு என்றுதான் கேட்டு வருகிறார். இதைவிட சீமான் மிகமோசமாக திமுகவையும் திமுக தலைவர்களின் திராவிட தலைவர்களையும் விமர்சிக்கிறார். இதை ஏன் அன்புமணி ராமதாஸ் கண்டிக்கவில்லை, இப்போது திமுகவை விமர்சிப்பதற்கு இந்த விஷயம் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது அதனால் இதை வைத்துக்கொண்டு திமுகவை விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில் இவர்கள் செய்வது அய்யோக்கியத்தனத்தின் உச்சம் என அவர் விமர்சித்துள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!