இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை... கட்சி ஆரம்பிப்பாரா..? ரஜினி கம்பி நீட்டுவாரா?

By Thiraviaraj RMFirst Published Dec 26, 2020, 12:13 PM IST
Highlights

வரும் 31ம் தேதி அவர் சொன்னபடி கட்சியை அறிவிப்பாரா? கொரோனா தாக்கமும் தலைகாட்டி வரும் நிலையில் அரசியலுக்கு முழுக்குப்போடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கடந்த 10 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்திற்கு கடந்த 22ம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் அவர் தனிமையில் இருந்து வந்தார். யாரையும் சந்திக்கவில்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமல், கடுமையாக ஏறி இறங்கி வந்ததால், மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்துவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.நடிகர் ரஜினியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முழு ஒய்வு எடுக்க ரஜினிகாந்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.ரத்த அழுத்தம் நேற்றைவிட கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகவே உள்ளது.பரிசோதனை முடிவுகள், ரத்த அழுத்தக் கட்டுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலையில் முடிவு எடுக்கப்படும்,'எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 31ம் தேதி அவர் சொன்னபடி கட்சியை அறிவிப்பாரா? கொரோனா தாக்கமும் தலைகாட்டி வரும் நிலையில் அரசியலுக்கு முழுக்குப்போடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

click me!