எடப்பாடி ஆட்சி நீடிக்குமா? கதை முடிந்துவிடுமா? மோடி நெனச்சா மொத்தமும் காலி!!

By sathish kFirst Published May 26, 2019, 11:29 AM IST
Highlights

பிஜேபி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அந்தக் கட்சி தனித்தே 300 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று விட்டது. இதனால் மத்தியில் மீண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையவுள்ளது. காங்கிரஸ் கட்சியை தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையை இதன்மூலம் பிஜேபி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். 

பிஜேபி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அந்தக் கட்சி தனித்தே 300 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்று விட்டது. இதனால் மத்தியில் மீண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையவுள்ளது. காங்கிரஸ் கட்சியை தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையை இதன்மூலம் பிஜேபி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். 

தேனி தொகுதியை தவிர 37 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. அதிமுக நாடாளுமன்றத் தொகுதிகளில் கவனம் செலுத்தாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள 22 தொகுதி கிடைத்த தேர்தலில் மட்டுமே இறங்கி வேலை பார்த்ததாக தமிழக பிஜேபி நிர்வாகிகள் பகிரங்கமாக அதிமுக மீதி குற்றம்சாட்டி வருகின்றனர்.  

இந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுக வெற்றியை உறுதி செய்ததால், ஆட்சிக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது.  நாடாளுமன்றத் தேர்தலில் பெருமளவு இடங்களைப் பெற்றாலும் தற்போதைய தமிழக அரசை பெரும்பான்மை இழக்கச் செய்யும்வகையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அதிருப்தியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களை தூக்கினால் ஆட்சியை கவிழ வாய்ப்புள்ளததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போதைய தமிழக ஆட்சி நீடிப்பதும் செல்வதும் பிரதமர் மோடி கையில்தான் இருக்கிறது. தற்போது காலியான 22 இடங்களில் 13 இடங்களை வென்றிருக்கிறார்கள். ஆக, 13 அதிமுக இடங்களை தி.மு.க. பிடித்திருக்கிறது என்றுதான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக. தன்வசமிருந்த இடங்களை இழந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, 11 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாலும். அதன் முடிவை வைத்துதான் இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மையை முடிவுசெய்ய முடியும். விடுமுறைக் காலம் முடிந்த பிறகு கோர்ட் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வந்தால் . அதைவைத்துத்தான் இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மை தீர்மானிக்கப்படும்.

இது போக, நமக்குத் தெரியாமல் தோப்பு வெங்கடாச்சலம் போல பலர் அதிருப்தியில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அது வெளியில் வராமல் இருப்பது மத்திய அரசின் கையில் இருக்கும். வரும் இன்று மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் உள்ளதா என பார்க்க வேண்டும். ஒருவேளை இடம் கிடைக்கவில்லையென முடிவுசெய்தால், மாநிலத்திலும் அதிமுகவைக் கைவிட்டுவிட்டார்கள் என்றுதான் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆக மோடி நினைத்தால் மட்டுமே இந்த ஆட்சி நீடிக்கும் இல்லையென்றால் கதை முடிந்துவிடும்!!

click me!