மோடி அமித்ஷா சொன்னால் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க கூடும்.. காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ஓபன் டாக்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 4:28 PM IST
Highlights

அதிமுக முழுக்கமுழுக்க மோடி அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ளது ஒருவேளை அவர்கள் சொன்னால் ஓபிஎஸ் இபிஎஸ் பயந்து கொண்டு சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள் அப்படி இல்லையென்றால் சசிகலாவுக்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அதிமுக முழுக்கமுழுக்க மோடி அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ளது ஒருவேளை அவர்கள் சொன்னால் ஓபிஎஸ் இபிஎஸ் பயந்து கொண்டு சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வார்கள் அப்படி இல்லையென்றால் சசிகலாவுக்கு வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற திட்டமே பாஜகவின் திட்டம் தான் என்றும் அவர் கூறினார்.

சிறையிலிருந்து விடுதலையான கையோடு சசிகலா அதிமுகவில் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் அவர் நிதானமாகவே இருந்து வருகிறார்ழ மாறாக ஆன்மீகப்பயணம் , தொண்டர்களை சந்திக்கும் பயணம் என அவர் கூறி வந்தாலும் அதற்கான நடவடிக்கையில் அவர் தீவிரமாக இல்லாத நிலையே உள்ளது. இதற்கிடையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை, சசிகலாவுக்கும் அதிமுகவுடன் எந்த சம்பந்தமும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால் அதிமுகவில் விரைவில் சேர்ந்து விடுவேன் எனது தலைமையில் அதிமுக செல்படும்நாள் வெகு தொலைவில் இல்லை, அதற்கான  நம்பிக்கை  தனக்கு உள்ளது என சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களில் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:-  மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரிகளை தடையின்றி வழங்க வேண்டும் செல்லுமிடமெல்லாம் பொதுமக்கள் மின் பிரச்சினையை கூறிவருகின்றனர், போதிய மின்சார தொகுப்பையும் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும். விரைவில் மின் தட்டுப்பாடு சரி செய்யப்பட வேண்டும், பேரறிவாளன் விவாகாரத்தில் திமுகவுடனான கூட்டணியில் விரிசலோ, உரசலோ இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது சகஜம்தான், அனைத்து கட்சியும் ஒரே கருத்தில் சித்தாந்தத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

பேரறிவாளன் விடுதலையை திமுக ஆதரிக்கும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு முன்கூட்டியே தெரியும். இதேபோல் தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என பலர் விமர்சிக்கின்றனர். தேர்தல் வாக்குறுதி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு தரப்பட்டது, வெறும் ஐந்து மாதங்களுக்கு தரப்பட்டது அல்ல எனவே அந்த ஒரு சில மாதங்களிலேயே அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவார்கள். என எதிர்பார்ப்பது தவறு என தெரிவித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில்  சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதற்கு இபிஎஸ் ஓபிஎஸ் தான் பதில் சொல்லவேண்டும். சசிகலாவை அதிமுகவில் சேர்த்தாலும் சரி சேர்க்காவிட்டாலும் சரி என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒன்றுதான். சசிகலா முயற்சி வெற்றி பெறுமா என்றால் எனக்கு ஜோசியம் பார்க்க தெரியாது. கட்சியில் சேர்க்க படுவேன் என சசிகலா மட்டும் தான் சொல்லிக் கொள்கிறார்.

ஆனால் ஓபிஎஸ் இபிஎஸ் அப்படி கூறவில்லை சசிகலாவை, அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொல்லுவேன் ,ஆனால் மோடி அமித்ஷா நினைத்தால் சசிகலா கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படலாம், அதிமுக மோடி அமித்ஷா கையில் உள்ளது. மோடியோ அமித்ஷா சசிகலாவை சேர்த்துக் கொள்ளச் சொன்னால் ஓபிஎஸ் இபிஎஸ் பயந்துகொண்டு அவரை சேர்த்துக் கொண்டாலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இருவரும் தான் முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளனர். அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே பாஜகவின் திட்டம் தான் மோடி அமித் ஷாவின் திட்டத்தை அதிமுக செயல்படுத்துகிறது அவ்வளவு தான் இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!