திமுக வெற்றி பெற்றால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள்..? டிடிவி தினகரன் வைத்த சஸ்பென்ஸ்..!

Published : Feb 14, 2021, 09:16 PM IST
திமுக வெற்றி பெற்றால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள்..? டிடிவி தினகரன் வைத்த சஸ்பென்ஸ்..!

சுருக்கம்

தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அதிமுகவினர் எங்கே செல்வார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்  என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவை மீட்டெடுப்பது மட்டுமே எங்களுடைய ஒரே நோக்கம். அண்ணா கூறியதை இங்கே நானும் கூற விரும்புகிறேன். தப்பித் தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், நாங்கள் இங்கேதான் இருப்போம். ஆனால், அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும். சசிகலா சட்ட ரீதியாக சில வழக்குகளை சந்தித்து வருகிறார். அந்த வழக்குகளில் வெற்றி பெற்றவுடன் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதே என் விருப்பம்.டிடிவி தினகரனிடம் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்த கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “இஞ்சி திண்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
ஆளுநரை அவமதிக்க திட்டமிட்டே எழுதி கொண்டு வந்த ஸ்டாலின்..! இபிஎஸ் ஆத்திரம்..!