திமுக வெற்றி பெற்றால் மத்திய அரசு திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது.. ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

Published : Mar 03, 2021, 10:26 AM IST
திமுக வெற்றி பெற்றால் மத்திய அரசு திட்டம் எதுவும் தமிழகத்திற்கு வராது.. ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

சுருக்கம்

கருத்துக் கணிப்பில் மட்டும்தான் திமுக வெற்றி பெறும் என்றும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்பில் மட்டும்தான் திமுக வெற்றி பெறும் என்றும், தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெறாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில், ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்’என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக தேர்தல் துணை பொறுப்பாளர் விகே சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பேசிய எச்.ராஜா, ''அர்ஜூன் பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணிக்க தமிழகம் வந்த பிரதமர் மோடியை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்த்தனர். இவர்கள் கருப்பு பலூன் விடும் பள்ளி பிள்ளைகள்.

இந்த ஸ்கூல் பிள்ளைகளிடம் நிர்வாகம் சென்றால் மத்திய அரசு திட்டம் எதும் தமிழகத்திற்கு வராது. சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு போக பயந்துகொண்டு ராஜினாமா செய்தவர். கருத்துக்கணிப்பில் திமுக வெற்றி பெறும். ஆனால், தேர்தலில் வெற்றி பெறாது. கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியவர்கள் பொருளாதார புடலங்காயான மன்மோகன் சிங், மற்றும் எங்க ஊர் ப.சிதம்பரம்’’என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!