அதை செய்பவர்களை கண்டவுடன் சுட்டுத் தள்ளுங்கள்...!! அதிரடி உத்தரவு போட்ட மத்திய அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2019, 12:58 PM IST
Highlights

 தான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என அவர் தெரிவித்துள்ளார் .  அந்த போராட்டத்தின்போது  5 ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன . 
 

போராட்டம் என்ற பெயரில்  ரயில் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை  யாராவது சேதப்படுத்தினால் அவர்களை கண்டவுடன்   சுட்டுத் தள்ளுங்கள் என மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி  தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.  இச் சட்டத்தை எதிர்த்து   டெல்லி ஜமியா பல்கலைகழகம் மற்றும் உத்தர பிரதேசம் அலிகார் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். 

இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றும்  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி வருகின்றனர்.   அதே நேரத்தில் நேற்றைய முன்தினம்  மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய  அளவில் பேரணி நடத்தப்பட்டது  .  அதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னுடைய பிணத்தை தாண்டித்தான் இந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் நடைமுறைக்கு வர முடியும்,  தான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என அவர் தெரிவித்துள்ளார் .  அந்த போராட்டத்தின்போது  5 ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன . 

 

இந்நிலையில் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி ,  மாவட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளை நான் கடுமையாக எச்சரிக்கிறேன் ,  போராட்டம் என்ற பெயரில்  ரயில்வே உள்ளிட்ட  பொதுச்சொத்துக்களை யாரேனும் சேதப்படுத்தினால் அவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார் .  ஒரு அமைச்சர் என்ற முறையில் நான் இதற்கு உத்தரவிடுகிறேன்  என்று அவர் தெரிவித்துள்ளார் அவருடைய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!