கமல்ஹாசனுக்காக பதவியை உதறிய நேர்மைக்கு பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி... அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் மய்யம்..!!

Published : Dec 01, 2020, 12:17 PM ISTUpdated : Dec 01, 2020, 12:22 PM IST
கமல்ஹாசனுக்காக பதவியை உதறிய நேர்மைக்கு பெயர்போன ஐஏஎஸ் அதிகாரி... அண்ணாமலைக்கு டப் கொடுக்கும் மய்யம்..!!

சுருக்கம்

வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலுடனும், ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு.சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும்  அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.  

தமிழக அரசின் பல்வேறு உயர்பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவருக்கு அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு.சந்தோஷ் பாபு தன்னுடைய அபாரமான நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். 

இன்னும் 8 ஆண்டுகள் அரசு பணி இருந்த போதும், மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உயரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார். வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலுடனும், ஊழலுக்கு எதிராக போராடி வந்த திரு.சந்தோஷ் பாபு அவர்கள் தமிழகத்தை சீரமைக்கும்  அரும்பணியில் நம்மோடு இணைந்து இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன். மிகச் சரியான முடிவினை எடுத்திருக்கும் திரு.சந்தோஷ் பாபுவை மனதார பாராட்டுகிறேன். சந்தோஷ் குமாரினைப் போன்ற நேர்மையாளரின் வருகை நமது கட்சிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

அவரை பொதுச்செயலாளராக நியமித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரைப் பதித்தவர் இதிலும் தடம் பதிப்பாளர் என்பதில் ஐயமில்லை. எப்போதும்போல அனைத்து உறுப்பினர்களும் நமது புதிய பொதுச் செயலாளர் (தலைமை அலுவலகம்) அவர்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் அளித்திட வேண்டுகிறேன். இப்படிக்கு கமல்ஹாசன். என அதில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார் , அதே போல தமிழக காங்கிரசில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச சிகாந்த் செந்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!