புள்ளைகுட்டிகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சல் ஆகியிருப்பேன்... அதிர்ச்சியூட்டும் வைகோ மகன்..!

By Thiraviaraj RMFirst Published Aug 3, 2021, 10:22 AM IST
Highlights

நான், 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்து ஆடியது என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தியது.

'அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களை பார்த்த போது, நக்சல் ஆகிவிடும் எண்ணம் எனக்கு தோன்றியது' என ம.தி.மு.க., பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான வைகோ மகன் துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

தனக்கடுத்து தனது வாரிசுகளுக்கு கட்சியில் இடம் இல்லை எனத் தெரிவித்தவர் வைகோ. ஆனால், தற்போது அவரது மகன் துரை வையாபுரி கட்சி சார்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். விரைவில் அவருக்கு மதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் நடந்த ம.தி.மு.க. நிகழ்ச்சியில் பேசிய அவர், ’’எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது. நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். திராவிடம், மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது.

நான், 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்து ஆடியது என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தியது. 45 வயதுக்கு மேல் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சல் ஆகிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது’’ எனத் தெரிவித்தார்.

click me!