நானா...பாஜக.,விலா? ஆச்சர்யத்துடன் கேட்ட கலைக்கோட்டுதயம்..!

 
Published : Jan 09, 2018, 06:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
நானா...பாஜக.,விலா? ஆச்சர்யத்துடன் கேட்ட கலைக்கோட்டுதயம்..!

சுருக்கம்

i wont join in bjp said kalaikottuthayam

நானா...பாஜக.,விலா? ஆச்சர்யத்துடன் கேட்ட கலைகோட்டுதயம்..!

வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த கா.கலைகோட்டுதயம்..பாஜக-வில் சேர்ந்ததாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம், பாஜக வில் இணைந்ததாக இன்று ஒரு தகவல் வெளியானது.

இது குறித்து,நாம் அவரிடம் விசாரித்தோம்..அப்போது அவர்,“தான் பாஜக-வில் இணைந்ததாக வெளிவந்த தகவல் வதந்தி என்றார்.தன்னுடைய சகோதரர் நடத்திய விழாவிற்கு தான் சென்றிருந்த போது,,அங்கே பாஜகவின் முக்கிய புள்ளிகளை  வந்திருந்ததாகவும்,அவர்களை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து  பேசிக்கொண்டிருந்ததாகவும்,அதை வைத்து,ஏதோ தான் பாஜக வில் இணைந்து விட்டதாக தவறான தகவல் பரப்பி விட்டுள்ளனர் என்று குறிபிட்டார்.

ஆனால் நாம் விசாரித்த போது,கலைக்கோட்டுதயத்தின் சகோதரர் தான் பாஜக வில் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பு:

மேலும்,ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்,நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட  கலைக்கோட்டுதயம்,வாக்கு எண்ணிக்கை முடிவில்,பாஜக பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,பாஜக நோட்டோ  வாக்குகளை விடவும் குறைவாக பெற்றது என்பது கூடுதல்தகவல்...

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!