நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்; ஆனால் சிவகங்கையில்... ஹெச்.ராஜா சொல்வது என்ன?

By Narendran S  |  First Published Apr 7, 2023, 7:59 PM IST

பிரதமர் குறித்து பேச முத்தரசனுக்கு தகுதியில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 


பிரதமர் குறித்து பேச முத்தரசனுக்கு தகுதியில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், உலகில் 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினரைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவராக்கியது பாஜக தான். மோடி அமைச்சரவையில் பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். சமூக நீதியை பாஜகதான் காப்பாற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் கேலிக்கூத்தாக சமூக நீதி மாநாட்டை நடத்தியுள்ளனர். அவர்களை மக்கள் மறந்துவிட்டனர். தாங்கள் இருப்பதை ஞாபகப்படுத்த மாநாட்டை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் விவகாரம்... முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!!

Tap to resize

Latest Videos

தமிழக நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நல்ல எண்ணிக்கையில் பாஜகவுக்கு எம்பிகள் கிடைக்கும். தேர்தலில் நிற்பதற்கு திமுகவில் கையூட்டு வாங்கியவர் முத்தரசன். அவருக்குதான் பிரதமர் குறித்து பேச தகுதியில்லை. தமிழகத்தில் சுறுசுறுப்பான கட்சியாக பாஜக உள்ளது. நமது தொன்மை 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கீழடி அகழாய்வை அழமாகவும், அகலமாகவும் செய்தால் தான் அது தெரியவரும். ஆனால் ஆழம் குறைவாக அகழாய்வு செய்துவிட்டு 2,600 ஆண்டுகள் தான் முற்பட்டது என கூறி வருகின்றனர். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அண்ணாமலை வெளியிடுவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல மாற்றங்கள் வரும். அதன்பிறகு திமுக ஆட்சி எவ்வளவு காலம் என்பது தெரியவரும்.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறது அதிமுக... அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!!

ஏற்கெனவே மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்கள் இணைந்து தான் நடைபெற்றன. அதை இந்திரா காந்தி தான் மாற்றினார். மேலும், மாநில ஆட்சியாளர்களின் ஸ்திரத் தன்மை இன்மையாலும் மாறியது. இனி ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஓராண்டுக்குள் சாத்தியம் இருக்குமா என்பது தெரியவில்லை. பழனிசாமி ஒன்றாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறார். நடந்தால் நல்லது. இந்தியாவின் சக்தியை அறியாதவர்கள் காங்கிரஸார். அதை புரிந்தவர் பிரதமர் மோடி. சிவகங்கை எம்பி யாரு என்று எனக்கே மறந்துவிட்டது. மக்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்? எம்பிக்கே தொகுதி மறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

click me!