பொய்யாவே பேசிகிட்டு இருந்தா தினகரன் பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்..! அமைச்சர் மிரட்டல்..!

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
பொய்யாவே பேசிகிட்டு இருந்தா தினகரன் பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்..! அமைச்சர் மிரட்டல்..!

சுருக்கம்

I will publish a secret about Dinakaran Minister threatens me

பொய்யான தகவல்களை தொடர்ந்து தினகரன் பேசிவந்தால், அவர் தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்கள் வெளியிடப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி மற்றும் தினகரன் ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தினகரனை கட்சியை விட்டு ஒழித்துவிட வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி தரப்பும் பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என தினகரனும் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.

முதல்வர் பழனிச்சாமியை பற்றி தினகரனும் தினகரனைப் பற்றி முதல்வர் பழனிச்சாமியும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் தொடர்ந்து தினகரன் சொல்லிவருவது முதல்வரின் மரியாதைக்கு கலங்கம் விளைவிப்பதாகவும் இதேபோன்று தொடர்ந்து பொய்யான தகவலை பேசிவந்தால், தினகரன் பற்றிய ரகசிய தகவல்கள் வெளியிடப்படும் என எச்சரித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!