வாழ்ந்தால் இந்தியாவில் தான் லண்டன் செல்ல ஐடியா இல்ல.. முகேஷ் அம்பானி அறிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2021, 5:46 PM IST
Highlights

லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை  592 கோடி செலவில் வாங்கியுள்ள இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என ரிலையன்ஸ்  குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை  592 கோடி செலவில் வாங்கியுள்ள இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் லண்டனுக்கு குடிபெயர உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என ரிலையன்ஸ்  குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மகாராஷ்டிர மாநிலத்தில் ஆண்ட்ர்லியாவில் உள்ள சுமார் 4 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். அதாவது high-rise உயரமான கட்டிடத்தில் வசிப்பது அவரது குடும்பத்திற்கு போரடித்து விட்டதால், தரைதளத்தில் பரந்துவிரிந்த மாளிகையில் வசிக்க அவரது குடும்பம் விரும்புவதாகவும் அதன் காரணமாக சமீபத்தில் அவர் லண்டன் புறநகரில் பக்கிங்காம் ஹையர் ஸ்டோக் பார்க்கில் சுமார் 592 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார் என்றும், அங்கு வசிக்க அவரது குடும்பம் விரும்புவதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள்  ஸ்டோக் பார்க் மாளிகையில் குடும்பத்துடன் குடியேற உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. 

லண்டன் பக்கிங்ஹாம் ஹயர் ஸ்டோக் பார்க் மாளிகையில் சுமார் 49 பிரமாண்ட படுக்கை அறைகளும், பிரமாண்ட வரவேற்று அறை மற்றும் விருந்தினர் ஒய்வு அறைகள் உள்ளது என்றும் கூறப்பட்டது, பக்கிங்ஹாம் ஹயர் ஸ்டோக் பார்க் இதற்கு முன்னர் ஆடம்பர ஹோட்டலாக இருந்ததாகவும் தகவல் வெளியானது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள நிலையில், லண்டனில் பாதி நேரமும், மும்பையில் பாதி நேரமும் தங்க அவரது குடும்பம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேபோல் மும்பை ஆண்டர்லியா வீட்டுக்கு வெளியே வெடிகுண்டு நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட சம்பவத்தால் அவரது குடும்பம் இந்த முடிவை எடுத்ததாகவும் அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தொடர்ந்து பிரிட்டன், லண்டன் என வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வரும் நிலையில், அம்பானி குடும்பமும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. எப்போதும் மும்பை இல்லத்திலேயே அம்பானி குடும்பம் தீபாவளி கொண்டாடுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக லண்டன் ஸ்டோக் பார்க் மாளிகையில் அவர்கள் தீபாவளி கொண்டாடியுள்ளனர், எனவே அவர்கள் லண்டனில் குடியேறுவது உறுதியாகி விட்டது என நாளேடுகளில் செய்தி வெளியானது.

ஸ்டோக் பார்க் லண்டன் நகரத்திற்கு சற்று தூரத்தில் இருப்பதால் அவரது குடும்பத்திற்கு என பிரத்யேக மருத்துவமனை, தனி கோயில் போன்றவற்றை அங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது, இந்த தகவல் சமூக வலைதளத்தில் வேகமாப பரவிய நிலையில் பரவலாக மக்கள் மத்தியில், விவாதமாகவும், பேசுபொருளாகவே மாறியது, இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் இந்தியாவை விட்டு செல்கிறாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது, இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் தவறானது, இது உண்மைக்குப் புறம்பானது என கூறி ரிலையன்ஸ் குழுமம் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-  

அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எந்த இடத்திற்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஹாண்ட் ஹோல்டிங் லிமிடட் நிறுவனம் கையகப்படுத்தியது, அதை முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் ரிசார்ட்டாக மேம்படுத்துவது தான் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம், வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வணிகத்தை கருத்தில் கொண்டு இந்த  சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பல் துறையை உலக அளவில் விரிவுபடுத்தும் திட்டம் தான் எங்களிடம் உள்ளது. ஆனால் அம்பானியின் குடும்பம் லண்டனிலுள்ள  ஸ்டோக் பார்க்கில் வசிக்க திட்டம் வைத்துள்ளதாக சமூக ஊடங்களில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது என அதில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!