நான் பொய் சொல்லமாட்டேன்; என்னை பொய் சொல்ல சொல்கிறார்கள்; எம்பி. ராகுல் காந்தி வீசிய அரசியல் அணுகுண்டு.!

By T BalamurukanFirst Published Jul 28, 2020, 8:55 AM IST
Highlights

"இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கவில்லை என, என்னால் பொய் சொல்ல முடியாது. என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன்,'' என  காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கவில்லை என, என்னால் பொய் சொல்ல முடியாது. என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இந்திய சீன எல்லை பிரச்சனை இந்திய நாட்டிற்கு மானப்பிரச்சனையாக அமைந்துள்ளது.லடாக் கல்வான் பகுதி இந்தியாவிற்கு சொந்தமான என வரலாற்று ஆவணங்கள் சொல்லுகிறது.ஆனால் சீனா எங்களுக்கு பாத்தியப்பட்டது என்று இந்தியாவிடம் வம்பு இழுத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. லடாக் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20பேர் வீரமரணம் அடைந்தார்கள். அப்போது இருந்தே பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறது காங்கிரஸ். 

 பா.ஜக ஆளும் மத்திய அரசு சீனாவிடம் தோல்வியடைந்து விட்டது. அவர்கள் இந்திய எல்லையான லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றிவிட்டார்கள் என்று  காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம் சுமத்தி வருகிறார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு சீனா நன்கொடை வழங்கியிருக்கிறது காங்கிரஸ் தான் இந்திய எல்லை பகுதியை தாரை வார்த்திருக்கிறது. என்று இருகட்சித் தலைவர்களும் அறிக்கையில் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே  மோதல் நீடித்து வருகிறது. லடாக் அருகே, இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில், வெளியிட்ட, 'வீடியோ'வில், ராகுல்காந்தி பேசியபோது... "இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ஆக்கிரமிக்கவில்லை என, பொய் சொல்லச் சொல்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், என்னால் பொய் சொல்ல முடியாது. இதனால், என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், பொய் சொல்ல மாட்டேன்.

மற்றொரு நாடு, நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதை நினைத்து, என் ரத்தம் கொதிக்கிறது. கடும் மன உளைச்சலாக உள்ளது. இந்த உண்மையை மறைப்பது தான் தேச விரோதம். இதை மக்களின் கவனத்துக்கு எடுத்துச் சொல்வது தான், தேசபக்தி. எனவே, இந்த விஷயத்தில் உண்மையை மறைக்க மாட்டேன். ஒரு இந்திய குடிமகனாக, என் நாடும், நாட்டு மக்களும் தான், எனக்கு முக்கியம். 

click me!