கொன்றுவிடுவேன்... திமுக நிர்வாகிகள் அடாவடியால் நடுங்கித் தவிக்கும் நடிகை.. சாட்டையை சுழற்றுவாரா மு.க.ஸ்டாலின்!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2021, 3:48 PM IST
Highlights

திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா?

சாமி கரிசணம் காடும்போது பூசாரிகள் புல்லுருவிகளாக இருக்கிறார்கள் என்கிற கதையாக இருக்கிறது திமுக ஆட்சியில் நடைபெறும் சம்பவங்கள். ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மத்தியில் பாராட்டுகளை குவித்துவருகிறார். மற்றொரு பக்கம் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டி வருவது வேதனையை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது நடிகை ஆதிரா பாண்டி லட்சுமி அளித்துள்ள புகார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், ‘’என்னையும், எனது மகனையும் திமுக பிரமுகர்கள் மிரட்டுகிறார். கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’சந்தேகதிர்க்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா?

நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை என்று பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஆதிரா பாண்டிலட்சுமி. ’ஒரு குப்பை கதை’உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒருபுறம் மன்னர் மக்களுக்காக சேவை செய்து வரும் நிலையில், மன்னரின் அடிப்பொடிகள் அவர்களது செயல்களால் மண்ணள்ளி போட்டு வருகிறார்கள். சாட்டையை சுழற்றுவாரா மு.க.ஸ்டாலின்..? என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

click me!