சைக்கிள் சின்னம் கிடைக்க இறுதி வரை போராடுவேன்.. சட்டமன்றத்தில் தமாகா குரல் ஒலிக்கும். அசராத வாசன்.

Published : Mar 03, 2021, 01:19 PM ISTUpdated : Mar 03, 2021, 01:22 PM IST
சைக்கிள் சின்னம் கிடைக்க இறுதி வரை போராடுவேன்.. சட்டமன்றத்தில் தமாகா குரல் ஒலிக்கும். அசராத வாசன்.

சுருக்கம்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் கூறியதாவது, இன்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து  எங்கள் தரப்பில் பேச இருக்கிறார்கள். சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புகிறேன்,  

தமாகா- விற்கு சைக்கிள் சின்னம் கிடைக்க இறுதி வரை முயற்சி செய்வேன் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி 13 வது செயற்குழு கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி. கே. வாசன் தலைமையில்  சென்னை தி.நகரில் நடைபெற்று நடைபெற்றது. இதில் 400ற்கும் மேற்பட்ட இளைஞர் அணியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தஜி.கேவாசன் கூறியதாவது, 

இன்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து  எங்கள் தரப்பில் பேச இருக்கிறார்கள். சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புகிறேன்,  நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு  தமாகா இளைஞர் அணி 234 இடங்களிலும் களப்பணியாற்றுவர்கள்.  மேலும் எதிர் கட்சியினர் அளித்துள்ள பொய் வாக்குறுதிகள் தோற்று போகும். 

எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை 100% பயன்படுத்தி சட்டமன்றத்தில் தமாகாவின் குரல் ஒலிக்கும் நிலையை நாங்கள் ஏற்படுத்துவோம். மேலும் எங்களுடைய சைக்கிள் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சட்ட முயற்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.  இறுதி வரை அந்த முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?