நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் அதைக் கேட்க நீ யார்... பாஜகவினர் மீது பாயும் முன்னாள் முதல்வர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 31, 2020, 2:38 PM IST
Highlights

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் அதைக் கேட்க நீ யார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவினரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். 

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் அதைக் கேட்க நீ யார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவினரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். பசு விவகாரத்தில் கருத்து சொல்ல காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பயப்படுகிறார்கள், ஆனால் எனக்கு அந்த பயம் இல்லை நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், உணவைத் தேர்வு செய்வது அவரவர் உரிமை என அவர் கூறியுள்ளார்.

 

கர்நாடக மாநில பாஜக அரசு அண்மையில் பசுக்களை  உணவுக்காக கொள்வதை தடை செய்து சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரசின் 136-வது தொடக்க நாளில் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் தலைவர், சித்தராமையா,  நான் மாட்டுக்கறி சாப்பிடுவதை தடுக்க நீ யார்.? என்ற கேள்வியை சட்டப்பேரவையில் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் என்றார். உணவை தேர்ந்தெடுப்பது எனது உரிமை, அதை கேள்வி கேட்க நீ யார். நீ உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை சாப்பிடு. நான் வந்த அதை தடுக்க மாட்டேன் என்றேன். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜகவின் கொள்கையை ஆதரிக்கின்றனர். எனவே மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல அஞ்சுகின்றனர். ஆனால் எனக்கு அந்த அச்சம் இல்லை எனவும் கூறியுள்ளார். 

கர்நாடகாவின் பசுவதை சட்டம் விவசாயிகளை தான் பாதிக்கும், வயது முதிர்ந்த பசுக்கள், எருமைகளை விவசாயிகள் எங்கே அனுப்புவார்கள். அவற்றை பராமரிக்க நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் தேவைப்படும். அதனை யார் விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். அவ்வாறு பராமரிக்க முடியாத காரணத்தினால்தான் விவசாயிகள் இறைச்சிக்கு அவற்றை பயன்படுத்துகின்றனர் என்றார். கர்நாடக மாநில அரசும், பாஜக அரசின் பசுவதை தடைச் சட்டத்தால், விவசாயிகள், இறைச்சி கூடங்கள், தோல் தொழிற்சாலைகள் என பலதரப்பட்டவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படுவதோடு, ஒரு மாட்டிற்கு 50 ஆயிரம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 

click me!