சிதம்பரம் தொகுதி வேண்டும்! அடம்பிடிக்கும் திருமா! தி.மு.க கூட்டணியில் சலசலப்பு!

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 9:49 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி தான் வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளது தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி தான் வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக பேசியுள்ளது தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வரும் தி.மு.க தற்போதே தொகுதிப் பங்கீட்டையே முடித்துவிட்டது. எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை தீர்மானித்து தற்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வில் தி.மு.க தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுவும் வழக்கமாக திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்கு பதிலாக இந்த முறை விழுப்புரம் தொகுதியை தி.மு.க ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்த தகவலை தி.மு.க தரப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமாவளவனுக்கு பாஸ் செய்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த திருமா, தனக்கு சிதம்பரம் தொகுதி தான் வேண்டும் என்று தி.மு.கவை வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. 

ஆனால் தி.மு.க தரப்பில் இருந்து பாசிட்டிவ்வாக எந்த தகவலும் திருமாவிற்கு கிடைக்கவில்லை. ஆனால் 1996 தேர்தலுக்கு பிறகு சிதம்பரத்தில் தி.மு.க போட்டியிடவில்லை என்பதால் இந்த முறை அந்த தொகுதி தி.மு.க வேட்பாளருக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் தான் சிதம்பரத்தை திருமாவிற்கு விட்டுக் கொடுக்க தி.மு.க மேலிடம் தயங்குகிறது.

 

ஆனால் பொறுத்து பொறுத்து பார்த்த திருமாவளவன் நேற்று முன்தினம் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் தான் தான் போட்டியிடுவேன் என்று வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படாத நிலையில் சிதம்பரத்தில் தான போட்டியிட உள்ளதாக திருமா எப்படி அறிவிக்கலாம் என்று கடலூர் மாவட்ட தி.மு.கவினர் மேலிடத்திற்கு புகாரை தட்டி விட்டு வருகின்றனர்.

click me!