விடுறதா இல்ல விஷால்! நெக்ஸ்ட் கவர்னர்தான்! அடுத்து படிப்படியா...!

 
Published : Dec 06, 2017, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
விடுறதா இல்ல விஷால்! நெக்ஸ்ட் கவர்னர்தான்! அடுத்து படிப்படியா...!

சுருக்கம்

I will appeal to the governor - Vishal

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறையிட உள்ளதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வேண்டும் என்று கூறி தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிட் பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தண்டையார்பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார். 

இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார். இதையடுத்து ஆதாரத்தின் அடிப்படையில் விஷாலின்  வேட்பு மனு ஏற்கப்பட்டது. ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார். இதையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிடுவேன் எனவும் சட்ட ரீதியாக நடவடிக்கையில் இறங்குவேன் எனவும் விஷால் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தலைமை செயலகத்துக்கு வந்த விஷால், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட தாம் அளித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து அப்போது அவர் முறையிட்டார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை விஷால் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட தனது மனு நிராகரிக்கப்பட்டது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதாக கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறினார். மனுவை ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிலையில் மீண்டும் நிராகரிப்பதற்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வேட்புமனுவில் தவறு இருந்தால் அதை அளித்தவர் இருக்கும்போதே கூறாதது ஏன்? என்றும் விஷால் கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!