எப்போதும் கூலாக இருக்கும் அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்.. சொன்னது நடக்கும்.. அண்ணாமலை சரவெடி.!

By vinoth kumarFirst Published Nov 30, 2021, 8:44 AM IST
Highlights

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம் இது திராவிட மண் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சொன்னதை செய்யும். அமைச்சர் சேகர்பாபு பயந்துவிட்டார் என்பதை அவரது உடலே காட்டிக் கொடுக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் வைக்கலாம் இது திராவிட மண் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை அடையாறில் நேற்று பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- அமைச்சர் சேகர்பாபு பயந்து போய் இருப்பதை தற்போது பார்க்கிறேன். எப்போதும் கூலாக இருக்கும் அவர் முதல்முறையாக ஆடிப்போய் இருப்பதை பார்க்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சொன்னதை செய்யும். அமைச்சர் சேகர்பாபு பயந்துவிட்டார் என்பதை அவரது உடலே காட்டிக் கொடுக்கிறது.

 தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வேட்புமனுக்கள் சிறிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. அது, இந்த முறை நடக்காது என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் அரசியல் லாபத்திற்காக அனைவரும் பாஜக கொண்டுவரும் சட்டங்களை எதிர்க்கும் போது அதிமுக பாஜகவுடன் நின்று இருப்பதாகவும், சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு இது போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இருக்கவேண்டும்.

பெரியாரின் சித்தாந்தத்திற்கு நேரெதிராக தனிமனிதரின் பிறந்த நாளை திமுக கொண்டாடுகிறது. எனவே பெரியாரின் சித்தாந்தத்தின் படி தான் ஆட்சி நடத்துகிறோம் என்பதை திமுக மாற்றி கொண்டு, ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்காக கட்சி நடத்துகிறது என்று சொன்னால் அதை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினார். தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒரே கருத்துக் கொண்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் என அண்ணாமலை கூறினார்.

click me!