குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பண்ணுங்க.. ஸ்டாலினை எச்சரித்த பாஜக பிரமுகர் !

By Raghupati RFirst Published Nov 30, 2021, 7:51 AM IST
Highlights

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுங்க,மத்ததெல்லாம் அப்புறம் பண்ணுங்க என்று முதல்வர் ஸ்டாலினை எச்சரித்திருக்கிறார் பாஜக பிரமுகர்.

பெட்ரோல் மற்றும்  டீசல் விலை மீதான வாட் வரியை குறைக்க சொல்லி மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வர்த்தக பிரவு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கன்டித்து மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக வர்த்தக பிரவு மாவட்ட தலைவர் மனோகரன், ‘மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்தும், தமிழ்நாடு அரசு பெட்ரோல் , டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை.  கடந்த கால ஆட்சியின் போது தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். இந்த முறை அவர் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், பலமுறை பல பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. பெட்ரோல் , டீசல் விலையை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. 

இதுவே அவருடைய பொய்யான வாக்குறுதிகளை எடுத்துக்காட்டுகின்றது. இன்று மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவையான பெட்ரோல் , டீசல் இருக்கின்றன.  எனவே உடனடியாக தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். கடந்த மாதம் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5 ,  டீசலுக்கு ரூ. 10 என மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலை குறைத்துள்ளது. மேலும் தி. மு. க. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்ததை போல குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக அறிவிப்பினையும் வழங்கவேண்டும்.முதலில் இதை வழங்க வேண்டும்.மத்ததெல்லாம் அப்புறம் கொடுங்கள்’ என்று கூறினார்.

click me!