மோடிகிட்ட நேருக்கு நேர் பேச எனக்கு மட்டுமே தைரியம் உண்டு..! வாய்க்கு வந்ததெல்லாம் விளாசி தள்ளும் வைகோ..!

Published : Aug 08, 2019, 05:43 PM IST
மோடிகிட்ட நேருக்கு நேர் பேச எனக்கு மட்டுமே தைரியம்  உண்டு..! வாய்க்கு வந்ததெல்லாம் விளாசி தள்ளும் வைகோ..!

சுருக்கம்

"கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வைகோ.. அரசியல் நாகரீகம் அற்றவர்; காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் வைகோ பேசிய கருத்துக்களுக்கு  தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகட்டும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அதன் படி,

"கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வைகோ.. அரசியல் நாகரீகம் அற்றவர்; காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என குறிப்பிட்டு சொன்னால் பதில் கூட தயாராக இருக்கிறோம்;  அரசியல் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ; மோடி, சுப்பிரமணிய சுவாமியை சந்தித்த வைகோ பின் மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளார்.

உலகின் அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு நேரு சேர்த்ததை வைகோ துரோகம் என்கிறாரா ?2016இல் ஜெயலலிதாவை வீழ்த்த திமுக வலிமையான கூட்டணி அமைத்த போது அதற்கு எதிராக சதி செய்தவர்தான் வைகோ" என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைகோ பேசியது..

காங்கிரஸ் தயவால் நான் மாநிலங்களவைக்கு செல்லவில்லை..என் மீது உள்ள வன்மத்தால் அழகிரி கூறியுள்ளார். ஒரு இனத்தையே அளித்தது காங்கிரஸ்... திமுகவால் தான் நான் எம் பி ஆனேன்...என் மீது வேறு எதுவும் கோவம் இருந்தால் திட்டித்தீருங்கள்.. நான் ஒருபோதும் காங்கிரஸ் உதவியால் எம்பி ஆகவில்லை...

பெரியாரும் ராஜாஜியும் நண்பர்கள் தானே.. பிரதமர் மோடியிடம் சென்று அவருடைய தப்பை சுட்டிக் காட்டுகிற தைரியம் எனக்கு உண்டு. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் பார்த்த போதும் நண்பராக சந்தித்தேன்.. பிரதமராக பார்க்கிறேன் என்று தான் கூறி வந்தேன். அற்ப புத்தி உள்ளவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. இவ்வாறு பேசி உள்ளார் வைகோ.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!