பள்ளி மாணவி 14 முறை கத்தியால் குத்தப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனேன்.. கலங்கும் ஜோதிமணி.!

By vinoth kumarFirst Published Jun 1, 2022, 9:02 AM IST
Highlights

மணப்பாறையில்  காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி, 14 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசியுள்ளேன். குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மணப்பாறையில்  காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி, 14 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன் என ஜோதிமணி கூறியுள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர், திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று கடைசி தேர்வு முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்து காதலை ஏற்கும் படி இளைஞர் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்ததால் அந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பித்துவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்த்தில் தொடர்புடைய நபரை உடனே பிடிக்க வேண்டும் என ஜோதிமணி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மணப்பாறையில்  காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவி, 14 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசியுள்ளேன். குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கும்போது வேதனையடைகிறோம். பிறகு கடந்து போய்விடுகிறோம். ஒரு பெண் சுயசிந்தனை, சுயவிருப்பற்ற ஆணின் விருப்பத்தை கட்டாயமாக ஏற்கவேண்டியவள, வெறும் உடல் என்கிற ஆபத்தான சிந்தனையிலிருந்தே இம்மாதிரியான கொடூரங்கள் உருவாகின்றன.

ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கும்போது வேதனையடைகிறோம். பிறகு கடந்து போய்விடுகிறோம். ஒரு பெண சுயசிந்தனை,சுயவிருப்பற்ற ஆணின் விருப்பத்தை கட்டாயமாக ஏற்கவேண்டியவள் ,வெறும் உடல் என்கிற ஆபத்தான சிந்தனையிலிருந்தே இம்மாதிரியான கொடூரங்கள் உருவாகின்றன.

— Jothimani (@jothims)

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற இந்த ஆபத்தான மனநிலையை மாற்ற ஆரம்பகல்வி பாடத்திட்டங்களிலும், கற்பிக்கும் முறையிலும் மாற்றம் தேவை. இத்துடன் கடுமையான சட்டங்களும், தண்டனையும் அவசியம். இதை ஒரு சமூகமாக நாம் கடந்து போய்க்கொண்டே இருப்பது நமது குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என ஜோதிமணி கூறியுள்ளார். 

click me!