”தெரியாது… நான் படிக்கல…” – பத்திரிக்கையாளர்களிடம் கடுகடுத்த சிவி சண்முகம்…

Asianet News Tamil  
Published : Jul 18, 2017, 09:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
”தெரியாது… நான் படிக்கல…” – பத்திரிக்கையாளர்களிடம் கடுகடுத்த சிவி சண்முகம்…

சுருக்கம்

I do not know I do not know whether the law minister Sivan Shanmugam went out of jeopardy

சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எனக்கு தெரியாது, நான் படிக்கல என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடுகடுத்து சென்றார்.
ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசிக்கு எதிராக சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதனால் சேலம் போலீசார் அவரை கைது செய்து கடந்த 13 ஆம் தேதி சிறையில் அடைத்தனர். 
இதனைதொடர்ந்து மாணவி வளர்மதி மீது நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக கூறி குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 
இந்நிலையில், வளர்மதி மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளது குறித்து செய்தியாளர்கள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர். 
அதற்கு அவர், எனக்கு தெரியாது, நான் படிக்கல என்று தனது காரை எடுக்கும் படி டிரைவரிடம் கூறியதுடன் செய்தியாளர்களிடம் கடுகடுத்து சென்றார்.

PREV
click me!

Recommended Stories

தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!