" நான் சங்கராச்சாரியார் மடியிலயே உட்காருவேன் ".. தி.கவை தெறிக்கவிட்ட அர்ஜூன் சம்பத்.

Published : Dec 28, 2021, 05:07 PM IST
" நான் சங்கராச்சாரியார் மடியிலயே உட்காருவேன் "..  தி.கவை தெறிக்கவிட்ட அர்ஜூன் சம்பத்.

சுருக்கம்

அதெல்லாம் அழிந்தொழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்னும் அதை பேசி வருகிறார். அதிலும் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்,  வியாசர் தொடங்கி சிவபெருமான் முதல் கிருஷ்ண பரமாத்மா வரை ஒருவர் கூட பிராமணர் இல்லை. அதேபோல் வேதங்கள் தொடங்கி 18 புராணங்கள் வரை எழுதியவர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை. 

சங்கர மரத்தைப்பற்றி  திராவிடர் கழகத்தினர் தவறான கருத்துக்களைப்  பரப்பி வருகின்றனர் என்றும், யார் வேண்டுமானாலும் சங்கரமடத்தில் போகலாம் என்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். " எச்.ராஜா சங்கராச்சாரியாரின் முன்னால்தான் உட்கார்ந்தார். ஆனால் நான் சங்கராச்சாரியாரின் மடியிலேயே உட்காருவேன் " என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆதிசங்கரர் உருவாக்கிய நான்கு மடங்களில்  ஒன்று காஞ்சி சங்கர மடம் என்று ஒரு தரப்பினரால் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் இல்லை, அது கும்பகோணம் சிருங்கேரி மடத்தின் கிளை என்றே வரலாற்று தரவுகள் கூறுகின்றன. ஆனால் இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த சங்கர மடம் திகழ்கிறது. இந்த மடத்தின் மீது பல்வேறு தருணங்களில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் என ஏராளமானோர் இந்த மடத்திற்கு வந்து மடாதிபதிகள் இடமும் ஆசிபெற்று சென்றுள்ளனர். இந்த வழக்கம் இப்போதும் தொடர்கிறது. இதனால் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மடமாக காஞ்சி சங்கர மடம் விளங்குகிறது. இந்நிலையில் காஞ்சி சங்கர மடத்திற்குள் தீண்டாமை நிலவுவதாக தொடர்ந்து திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

காஞ்சி சங்கர மடத்திற்கு  பிராமணர்களும், சூத்திரர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவது இல்லை, அங்கே பிராமணர்கள் சென்றால் அவர்களுக்கு இருக்கை கொடுக்கப்பட்டு அதில் அமர வைக்கப் படுகிறார்கள் ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ உள்ளே சென்றால் அவர்கள் நிற்க வைக்கப்படுகிறார்கள். அல்லது தரையில் அமர வைக்கப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்து வருகிறன. அதேபோல் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது சங்கராச்சாரிடம் ஆசிபெற சங்கர மடத்திற்கு சென்றிருக்கையில் அவர் தரையில் அமர வைக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. அதற்கான புகைப்படம் ஒன்றும் வெளியானது. அடுத்த சில தினங்களில் பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா சென்றிருந்த போது அவர் சங்கராச்சாரிக்கு இணையாக இருக்கையில் அமர்ந்திருந்தார். அதற்கான புகைப்படமும் வெளியானது. 

அப்போது இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு இதுதான் சங்கரமடம், பிராமணரான எச். ராஜாவுக்கு இருக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனுக்கு தரையா? என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கேள்வி எழுப்பின. அதேபோல பாஜக மத்திய அமைச்சர்களில் ஒருவரான எல்.முருகன் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், சங்கரமடத்தில் ஆசீபெற சென்றிருந்தபோது அவர் நிற்கவைத்து அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. அதற்கான புகைப்படம் ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எல்.முருகன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சங்கர மடத்தில் அவருக்கு இருக்கை தரப்படாமல் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு சங்கரமடத்தில் கிடைக்கும் மரியாதை இதுதான் என்று விமர்சம் முன் வைக்கப்பட்டது. இப்படி சங்கர மடம் குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்கள் புகார்கள் இருந்து வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

அப்போது அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற இளைஞர்களில் ஒருவர், சங்கரமடம் தீண்டாமை இருப்பதாக சொல்லப்படுகிறதே என எழுப்பிய கேள்விக்கு, அர்ஜுன் சம்பத் அளித்த பதில் பின்வருமாறு:- சங்கரமடம் குறித்து  திராவிடர் கழகம் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. சங்கர மடம் என்பது என்னுடைய குருமடம், ஆனால் சங்கர மடம் குறித்த தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. மடத்திற்கு யார் வேண்டுமானாலும் போகலாம், "எச். ராஜா அவர்களாவது சங்கராச்சாரியாரின் முன்னால் உட்கார்ந்தார். நான் சங்கராச்சாரியாரின் மடியிலேயே உட்காருவேன் " மொத்தத்தில் சங்கர மடத்தைப் பற்றி திராவிடர் கழகம் பொய் வதந்திகளை பரப்பி வருகிறது. சங்கரமடத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம், சங்கராச்சாரியார் கேரளத்தில்,  காலனியில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்தான் சங்கராச்சாரியார்.  ஆனால் அவர் தமிழை நீசபாசை என்று பேசியதாக பொய் பரப்பி வருகிறார்கள். பிராமணர்களைத் தவிர வேறு யாரும் சங்கரமடத்திற்கு நுழைய முடியாது என்று சொல்கிறார்கள்.

பிராமணர்கள் ஒன்றும் வானத்திலிருந்து இறங்கியவர்கள் அல்ல, எல்லோரும் நம் சகோதரர்கள்தான். இந்து மதத்தில் கட்டமைப்பு என்று ஒன்று இல்லவே இல்லை. நான்கு வர்ணம் இன்னும் இருப்பதாக பேசி வருகின்றனர். அதெல்லாம் அழிந்தொழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்னும் அதை பேசி வருகிறார். அதிலும் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள், வியாசர் தொடங்கி சிவபெருமான் முதல் கிருஷ்ண பரமாத்மா வரை ஒருவர் கூட பிராமணர் இல்லை. அதேபோல் வேதங்கள் தொடங்கி 18 புராணங்கள் வரை எழுதியவர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை. ஞானம் என்பது பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமானது என்று இப்பொழுதும் இல்லை, அப்போதும் இல்லை, எப்பொழுதும் இல்லை. ஆனால் இடையில் வந்த பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியால் சாதியை திணித்தார்கள். அது போலதான் சங்கரமடம் குறித்து திராவிடர் கழகம் தவறான தகவல்களை பரப்பி வருகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்