
ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வின் நிலைமை இப்படியா சிரிப்பாய் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?
என்னாச்சு?....
சசிகலா புஷ்பாவை நினைவிருக்கிறதா! தென் தமிழ்நாட்டிலிருந்து திடீரென முளைத்துக் கிளம்பி அ.தி.மு.க.வில் எம்.பி, மாநில மகளிரணி செயலாளர் என்று மளமளவென உச்சம் தொட்டவர். பின் தி.மு.க.வை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருடன் நட்பில் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு, கட்டம் கட்டப்பட்டர்.
போயஸ்கார்டனுக்கு விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தவர் ‘ஜெயலலிதா என்னை அறைந்தார்!’ என்று நாடாளுமன்றத்தில் கதறியழுது அ.தி.மு.க.வை அலற வைத்தவர். ஜெயலலிதாவுக்கே சவால் விடுத்த, சசியின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய லேடி அவர். கட்சி துரத்தியபோதெல்லாம் கொஞ்சமும் அசராமல் மீண்டும் மீண்டும் வந்து நின்னு ‘நானும் அ.தி.மு.க.தான்’ என்று சீன் போட்டவர்.
அப்பேர்ப்பட்ட சசிகலா புஷ்பா, அ.தி.மு.க. கடும் சரிவுக்கு ஆளாகி கிடக்கும் இந்நிலையில் ‘அ.தி.மு.க.வை வழிநடத்தும் சக்தி நானேதான்’ என்று பேசி சிரிக்க வைக்கிறார்.
“ஜெயலலிதாவிடம் அன்னைக்கு அடிவாங்குனதுலே எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஒரு அம்மா பிள்ளையை அடிக்குறதுக்கு சமமான விஷயமது. அழுதேன், கதறுனேன் யாரா இருந்தாலும் அதைத்தானே செய்வாங்க?
என் தலைமையில ஏற்கனவே ஒரு தனி அணி அ.தி.மு.க.வில் இருக்குது, ஃபங்ஷனாகிட்டுதான் இருக்குது.
தினகரன் சொன்ன மாதிரி என்னோட ஸ்லீப்பர் செல்களெல்லாம் அங்கே பதுங்கியிருப்பாங்க. நான் அழைப்பு விடுத்ததும், போர்ப்படை தளபதிகளாக என் பின்னாலே அத்தனை பேரும் அணி திரள்வாங்க. அப்படியொரு நிலை கூடிய சீக்கிரம் வரும்.
இப்ப சொல்றேன் எழுதி வெச்சுக்குங்க, அ.தி.மு.க.வை வழி நடத்த என்னால் மட்டுமேதான் முடியும்.” என்று சிரிக்காமல் ஆகப்பெரிய ஜோக்கை அடித்திருக்கிறார்.
ஏற்கனவே இருக்கிற தீபா போதாதுன்னு சசிகலா புஷ்பா வேற!
ஹும் ஜெயலலிதா செதுக்கிய அ.தி.மு.க. இன்னும் என்னென்ன அவலங்களையெல்லாம் சந்திக்க வேண்டுமோ?