பன்றி மேய்க்க வேண்டாமென்றே திமுகவுக்கு வந்தேன்... செந்தில் பாலாஜி பகீர்..!

Published : May 06, 2019, 01:17 PM IST
பன்றி மேய்க்க வேண்டாமென்றே திமுகவுக்கு வந்தேன்... செந்தில் பாலாஜி பகீர்..!

சுருக்கம்

அடிமைக் கூடாரத்தில் இருந்து கொண்டு பன்றி மேய்ப்பதற்கு நான் தயாராக இல்லாததால் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

அடிமைக் கூடாரத்தில் இருந்து கொண்டு பன்றி மேய்ப்பதற்கு நான் தயாராக இல்லாததால் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’முதல்வர் பிரச்சாரம் செய்ய செல்லும் இடம் வேறு, நான் செல்லும் இடம் வேறு. போலீசும், தேர்தல் ஆணையமும் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஒபிஎஸ் மீது விமர்சனம் என்னை துரோகி என அமைச்சர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து முதல்வராகிவிட்டு அவரையே தெரியாது என கூறியவர் முதல்வர் பழனிச்சாமி.

தர்மயுத்தம் நடத்தி ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சசாமி அரசு ஊழல் அரசு என்றும் விமர்சித்தவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அதன் பின்னர் பதவிக்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். பன்றி மேய்க்க நான் அப்படி நிலையை மாற்றிக்கொள்பன் அல்ல. அடிமைக் கூடாரத்தில் இருந்து கொண்டு பன்றி மேய்ப்பதற்கு நான் தயாராக இல்லை. இவர்களது அடிமைத்தனம் பிடிக்காமல் தான் அங்கிருந்து நான் வந்துவிட்டேன்" என அவர் கூறினார்.

 

முன்னதாக எடப்பாடி பழனிசாமி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் செந்தில் பாலாஜிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!