நிருபர்களுக்கு ‘கவர்’கொடுத்த பா.ஜ.க....போலீஸில் புகார் செய்த பத்திரிகையாளர் சங்கம்...

By Muthurama LingamFirst Published May 6, 2019, 1:10 PM IST
Highlights

இன்று தேர்தல் நடைபெற்று வரும் லடாக் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.வினர் பத்திரிகையாளர்களுக்கு  லஞ்சம் கொடுத்ததாகவும் அதற்கு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்றும் காஷ்மீரின் லே பத்திரிகையாளர் சங்கம் புகார் அளித்துள்ளது.
 

இன்று தேர்தல் நடைபெற்று வரும் லடாக் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.வினர் பத்திரிகையாளர்களுக்கு  லஞ்சம் கொடுத்ததாகவும் அதற்கு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்றும் காஷ்மீரின் லே பத்திரிகையாளர் சங்கம் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக லே பத்திரிகையாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இரண்டு பக்கக் கடிதம் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அக்கடிதத்தில், மாநில பா.ஜ.க. தலைவர் ரெய்னா, எம்.எல்.சி. விக்ரம் ரந்தாவா ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திகளில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக எழுதவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கவரில் போட்டு வெயிட்டாக கவனித்ததாகவும் அதற்காக பா.ஜ.க.வினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இத்தகவலை ஊர்ஜிதப்படுத்திய லே பத்திரிகையாளர் சங்கத் தலைவர் மொருப் ஸ்டான்சின், ‘பா.ஜ.க. நிருபர்களுக்கு கவர் கொடுத்த செய்தியை முழுமையாக, ஆதாரத்துடன் தெரிந்துகொண்ட பின்னரே போலீஸிலும், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம்’என்கிறார்.

ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை மறுக்கும் பா.ஜ.க.தலைவர் ரெய்னா,’லே பத்திரிகையாளர் சங்கத்தின் குற்றச்சாட்டு அபாண்டமானது. பா.ஜ.க.வை கேவலப்படுத்தும் நோக்கில் பரப்பப்படுகிறது. அதற்கு அவர்கள் உடனே மன்னிப்புக் கேட்காவிட்டால் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்’என்கிறார்.

We expect & to take cognisance of this complaint filed by the Press Club in Leh pic.twitter.com/FCzVj9VBOj

— Omar Abdullah (@OmarAbdullah)

click me!