ஜெயலலிதா கொடுத்த பதவி.. சாகும் வரை நானே அவைத்தலைவர்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுசூதனன்..!

Published : Oct 06, 2020, 02:52 PM IST
ஜெயலலிதா கொடுத்த பதவி.. சாகும் வரை நானே அவைத்தலைவர்... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மதுசூதனன்..!

சுருக்கம்

அதிமுகவின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை என மதுசூதனன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதிமுகவின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை என மதுசூதனன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதிமுகவை பொறுத்தவரை  முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 7-ம் தேதியான நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனிதனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுக அவைத்தலைவராக உள்ள மதுசூதனுக்கு உடல்நிலை குறைவு காரணமாக மாற்றப்பட திட்டமிடப்படுள்ளதாக தகவல் வெளியாகின. 

இது தொடர்பாக மதுசூதனன் கூறுகையில்;- அதிமுகவின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. அதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் முற்றிலுமாக தவறு. மதுசூதனன் சாகும் வரை அவர் தான் அவைத்தலைவர் என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

அதிமுக அவைத் தலைவர் பதவியில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையனை நியமிக்க சசிகலா திட்டமிட்டார். சசிகலா எவ்வளவோ கூறியும் என்னை அவைத் தலைவர் பதவியில் நீடிக்குமாறு செய்தவர் ஜெயலலிதா. ஓபிஎஸ் எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவார். பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மதுசூதனன் விளக்கமளித்தார். 

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!