தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்.. சசிகலா திடீர் அறிவிப்பு.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி.

Published : Mar 03, 2021, 10:12 PM ISTUpdated : Mar 03, 2021, 10:17 PM IST
தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்.. சசிகலா திடீர் அறிவிப்பு.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி.

சுருக்கம்

 நம்முடைய பொது எதிரியை தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து வேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலை விட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக  சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை அவர் கைப்பற்ற போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அரசியலை விட்டே விலக போவதாக அறிவித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:  

நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவி எண்ணத்திற்கிணங்க அவர் கூறியபடி இன்னும் நூற்றாண்டுக்கு மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். 

நம்முடைய பொது எதிரியை தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து வேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது எப்படி என் எண்ணத்தை செயல்படுத்தி சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. 

புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களும் தமிழக  மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் என்னக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பேன் என தெரிவித்துள்ளார் ஆமா முக்கா தேர்தலில் போட்டியிடப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில் சசிகலாவின் என்ற முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!