கூட்டணிக்காக அதிமுக எங்களிடம் கெஞ்சுகிறது... நாம் இல்லை என்றால் அதிமுகவே இல்லை... எல்.கே.சுதீஷ் ஆவேசம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 3, 2021, 7:55 PM IST
Highlights


இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியுள்ளது அதிமுக கூட்டணி விரிசலை அதிகரித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் தேமுதிக - அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் கூட்டணியை விட்டு வெளியேறு எண்ணத்திற்கு தேமுதிக வந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாமகவிற்கு ஒதுக்கியதைப் போல் தங்களுக்கும் 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், இல்லையெல் 20 தொகுதிகளுடன் சேர்த்து ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் தர வேண்டும் என்றும் தேமுதிக கறார் கேட்டுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 14 சீட்டுக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டும் எனக்கூறப்பட்டதால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அதிமுக - தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் பட்சத்தில் இன்று மாலைக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இருதரப்பினரும் ஆவலுடன் காத்திருந்தனர். 

இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியுள்ளது அதிமுக கூட்டணி விரிசலை அதிகரித்துள்ளது. போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய எல்.கே.சுதீஷ், நாம் தேர்தலுக்காக அதிமுகவை தேடி போகவில்லை, அவர்கள் தான் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள கெஞ்சுகிறார்கள். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இல்லை எனில் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என பேசியுள்ளது அதிமுகவினர் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இப்போது கூட விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் பல கட்சிகள் வர தயாராக இருப்பதாகவும், எனக்கு பலரும் போன் செய்து கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறில்லை. ஆனால் மற்ற சாதிகள் என்ன செய்வார்கள்? என்றும் பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

click me!