உங்ககூட கைகோர்க்க நான் தயாரா இல்ல... கமலை ஒதுக்கிய ரஜினி..!

First Published Sep 23, 2017, 7:33 AM IST
Highlights
i am not ready to join with you Rajini who allocated Kamal


அரசியலுக்கு வருவது உறுதி; ரஜினியுடன் சேர்ந்து அரசியல் செய்ய தயாராக இருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். ஆனால் கமலுடன் கைகோர்க்க தயாராக இல்லை என்பதை ரஜினிகாந்த் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

கமலின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்துள்ளது. அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன். தமிழக மக்களின் நலனுக்காக முதல்வராவேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்வேன் என்றும் ரஜினி வந்தால் அவருடன் இணைந்து அரசியல் செய்ய தயாராக இருப்பதாகவும் கமல் தெரிவித்தார்.

அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு மத்திய பாஜக அரசை  கமல் விமர்சிப்பதில்லை. அதேநேரத்தில் தமிழகத்தில் காலூன்ற ரஜினிக்கு வலைவீசுகிறது பாஜக. ரஜினி ஒத்துவராத நிலையில் பாஜகவின் அடுத்த ஆப்ஷன் கமல்தான்.

ஆனால் தற்போதுவரை தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கமல் தெரிவிக்கிறார். பாஜகவின் அழைப்பிற்கு இதுவரை பதிலளிக்காத ரஜினி, அரசியலில் கமல் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியதும் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கிறார்.

ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்ய தயாராக இருப்பதாக கமல் கூறியிருந்த நிலையில், மோடியின் தூய்மையே சேவை திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமலின் அழைப்பை மறைமுகமாக ரஜினி நிராகரித்துள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.

கமல் - ரஜினி... இருவரில் யாருடைய அரசியல் பிரவேசம் வெற்றி பெறுகிறது? யாருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கப் போகிறது? யார் ஜொலிக்கப் போகிறார்கள்? யார் எந்த பக்கம் போகிறார்கள்? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்..

click me!