நான் தான் ஜெயலலிதாவின் வாரிசு.. பல கோடி சொத்தை என்னிடம் ஒப்படையுங்கள்.. கர்நாடகா கோர்ட்டில் ஜெ.தீபா மனு

By vinoth kumar  |  First Published May 5, 2023, 2:00 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடகா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர்கள் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடகா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர்கள் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

Latest Videos

இதில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டனர். சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலையானர்கள்.

இதற்கிடையே தான் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கடிகாரங்கள் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை போது ஏலத்தில் விடுவது தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்பட இருந்தன. இதனிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த பல கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்  என கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கானது மே 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுமா?  ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.

click me!