"இன்னக்கி நான் மௌன விரதம்" கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் தப்பி தலை தெறிக்க ஓடிய எஸ்.வி சேகர்.

Published : Apr 02, 2022, 01:31 PM ISTUpdated : Apr 02, 2022, 09:19 PM IST
"இன்னக்கி நான் மௌன விரதம்"  கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் தப்பி தலை தெறிக்க ஓடிய எஸ்.வி சேகர்.

சுருக்கம்

முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வர்டு செய்து விட்டேன் எனக் கூறுவதற்கு எஸ். வி சேகர் என்ன படிக்காதவரா? இவர்களெல்லாம் எப்படி சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ்.வி சேகர் இடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் " இன்று நான் மௌன விரதம்"  என எஸ்.வி சேகர் பதில் அளித்து நழுவிச் சென்றிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் அரசியல் வகையராவில் எச். ராஜாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் எஸ்.வி சேகர். இவர் பாஜகவில் இருந்து வருகிறார் மோடிக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த இவர் சமீப காலமாக ஒதுங்கி இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு கருத்து ஒன்றை அவர் பதிவிட்டார். அப்போதே அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து  அவருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  மிதார் மொகைதீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க புகார் வழங்கினார். அதனை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் எஸ்.வி சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதுதொடர்பான வழக்கு சென்னை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து எஸ். வி சேகர் ஆஜராகி வருகிறார். தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் பலமுறை மனு தாக்கல் செய்தும் அதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது எஸ்.வி சேகர் தரப்பில் டெல்லியைச் சேர்ந்த சடகோபன் என்பவர் பதிவிட்ட கருத்தைத்தான் அப்படியே தான் ஃபார்வேர்ட் செய்ததாகவும் அதை,  அப்போது தான் அதை படிக்க தவறிய தாகவும், பதிவிட்ட பிறகுதான் அதில் அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால் அதை உடனே நீக்கி விட்டதாகவும் மன்னிப்பு கோரினார்.

முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வர்டு செய்து விட்டேன் எனக் கூறுவதற்கு எஸ். வி சேகர் என்ன படிக்காதவரா? இவர்களெல்லாம் எப்படி சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதைத்தொடர்ந்து பெண் பத்திரிகையாளரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்றும் தெரிவித்த அவர் அதற்கு பகிரங்க மன்னிப்பு கோரினார். இந்நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் எஸ்.வி சேகர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவரது வழக்கறிஞர் உடனிருந்தார். 

 

தங்கள் தரப்பு விளக்கத்தை காவல்துறை முன்பு அளித்து விட்டதாகவும், இனி இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் கூறினார். அப்போது எஸ்பி சேகரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தனர், " நான் இன்று மௌனவிரதம்" எனக்கூறி வேகவேகமாக காரில் ஏறிப் புறப்பட்டார். வாக்குமூலம் அளிக்க வந்ததாக கூறிய அவர், செய்தியாளர் கேள்விக்கு தான் இன்று மௌனவிரதம் என்று  நழுவிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!