
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 11வது முறையாக தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதை பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதல் அடுத்தடுத்து காங்கிரஸ் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என கூறியுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் 11-ஆவது முறையாக தோல்வியை ஏற்றுக் கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதை பாஜக, ஆம் ஆத்மியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதற்கு முன் 2021-ல் நடந்த வங்காள தேர்தல், 2019 இல் நடந்த மக்களவைத் தேர்தல், 2018ல் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து தேர்தல். 2017 இல் நடந்த உ.பி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் தேர்தல், 2017 இல் நடந்த குஜராத் தேர்தல், 2016 இல் நடந்த வங்காளம், அஸ்ஸாம் தேர்தல், 2015 இல் நடந்த டெல்லி தேர்தல், 2014 இல் நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல், 2014 இல் நடந்த லோக்சபா தேர்தல், 2013 இல் நடந்த டெல்லி தேர்தல், மற்றும் 2013 ராஜஸ்தான் தேர்தல், இவை அனைத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக ராகுல் டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங் மீண்டும் ஆம் ஆத்மியிடம் தோல்வி :
2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராகுல்காந்தி டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருத்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியின் வியூகத்தில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவோம் என கூறியிருந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்திருந்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆம் ஆத்மி இடமிருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவோம் என தெரிவித்திருந்த நிலையில் இப்போது பஞ்சாபிலும் ஆம் ஆத்மியிடமே காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு அக்காட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வி பெறுவார் என்று ஆரம்பத்திலேயே எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம் என்றார். அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அவர் தோல்வியுற்றுள்ளார்.
காங் தேர்தல் வியூகம் எடுபடவில்லை:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் சரியில்லை, 5 மாநிலங்களிலும் சிவசேனா காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. கோவா, உத்தரகாண்டில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் தோல்வியை சந்தித்துள்ளது. உ.பியில் அகிலேஷ் மற்றும் அவரது கூட்டணி கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர்கள் அங்கு தோல்வியை சந்தித்துள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் சரியில்லை என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதே நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவும் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மக்களின் குரல் கடவுளின் குரல் என்று ட்விட் செய்துள்ளார். இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மக்கள் அதிசயம் செய்தனர்- அரவிந்த் கெஜ்ரிவால்:
பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி குறித்து கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தனது உரையின்போது பஞ்சாப் மக்கள் அதிசயங்கள் செய்தார்கள். 75 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களை போலவே அரசு நடத்தப்பட்டது. இன்று பஞ்சாபில் பெரிய நாற்காலிகள் அசைக்கப்பட்டுள்ளன என்றார். பஞ்சாபில் கோலோச்சிய அனைத்து முக்கிய தலைகளும் தோல்வி சந்தித்துள்ளனர். நேர்மையான அரசியலை தொடங்கி ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றியுள்ளோம் எனக் கூறியுள்ளார். இதேபோல வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மனிஷ் சிசோடியா, கெஜ்ரிவால் வந்தால் தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் எல்லாம் நேர்மையாக கிடைக்கும் என மக்கள் எண்ணுகின்றனர். அது இன்று நாடு முழுவதும் தெளிவாகிவிட்டது என கூறினார்.
காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி கைப்பற்றும்:
இதே போல காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவர் ராகவ் சத்தா கூறுகையில் , இந்த தலைவர்கள் மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து தங்கள் அரண்மனைகளை அலங்கரித்தார்கள். இன்று அவர்களின் அரண்மனைகளில் நிறுவப்பட்ட ஒவ்வொரு செங்கல்லும் சாதாரண மனிதனின் ரத்தமும் வியர்வையும் கலந்த செங்கல்கள் ஆகும். இப்போது முழு அமைப்பையும் மாற்றவேண்டும், இந்திய வரலாற்றில் இன்று ஒரு பெரிய நாள் வரும், நாட்களில் நாடு முழுவதும் காங்கிரஸ்க்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சி மாறும் என கூறியுள்ளார்.